ஒரே குடும்பம், 7 ஹீரோயின், ஒரு டைரக்டர், ஒரு கேமராமேன்; தமிழ் சினிமாவை ஆண்ட இந்த குடும்பம் யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் ஒரே குடும்பத்திலிருந்து 7 நாயகிகள், ஒரு இயக்குநர், ஒரு கேமராமேன் எனத் திரையுலகையே ஒரு காலத்தில் ஆட்சி செய்த ஒரு குடும்பத்தின் கதை பலரும் அறியாத தகவல்.

தமிழ் சினிமாவில் ஒரே குடும்பத்திலிருந்து 7 நாயகிகள், ஒரு இயக்குநர், ஒரு கேமராமேன் எனத் திரையுலகையே ஒரு காலத்தில் ஆட்சி செய்த ஒரு குடும்பத்தின் கதை பலரும் அறியாத தகவல்.

author-image
WebDesk
New Update
Tamil Cinema mh

அரசியல், தொழில், சினிமா எனப் பல துறைகளில் குடும்பப் நபர்களின் தாக்கம் ஆழமாக இருந்திருக்கும். குறிப்பாக சினிமா துறைகளில், ஒரு நடிகை வந்துவிட்டால் அவரை பின்தொடர்ந்து பல நடிகைகள் சினிமாவில் நடிகைகளாக வந்துவிடுவார்கள். அந்த வகையில், தமிழ் சினிமாவில் ஒரே குடும்பத்திலிருந்து 7 நாயகிகள், ஒரு இயக்குநர், ஒரு கேமராமேன் எனத் திரையுலகையே ஒரு காலத்தில் ஆட்சி செய்த ஒரு குடும்பத்தின் கதை பலரும் அறியாத தகவல்.

Advertisment

குஜலாம்பாள் - எஸ்.பி.எல். தனலட்சுமி.

இந்தக் குடும்பத்தின் சினிமா பயணம் குஜலாம்பாளிடம் இருந்து தொடங்குகிறது. அந்தக் காலத்தில் பிரபலமான கர்நாடக இசைக் கலைஞராகத் திகழ்ந்த குஜலாம்பாள் தஞ்சாவூரை பூர்வீகமாகக் கொண்டவர். இந்த குடும்பத்தின் முதல் சினிமா நடிகை, 1930களில் அறிமுகமான எஸ்.பி.எல். தனலட்சுமி.

1935ஆம் ஆண்டில், நேஷனல் மூவி டோன் தயாரிப்பு நிறுவனம் 'பார்வதி கல்யாணம்' என்ற திரைப்படத்தைத் தயாரித்தது. இந்த படத்தின் தயாரிப்பாளர் மாணிக்கம், தஞ்சாவூரில் ஒரு மேடை நாடகத்தில் தனலட்சுமியின் நடிப்பைக் கண்டு வியந்து, அவரை இப்படத்தில் நாயகியாக அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த வரிசையில், தனலட்சுமியின் சகோதரி தமயந்தி கூட ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார்.

Advertisment
Advertisements

டி.ஆர்.ராஜகுமாரி

தனலட்சுமி தமயந்தி இருவரும் சினிமாவில் சில படங்களே நடித்திருந்தாலும், சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் இவருக்கு அடுத்து வந்த ராஜாயி தான். எஸ்.பி.எல். தனலட்சுமியின் வீட்டுக்கு வந்த இயக்குநர் கே.சுப்பிரமணியம், ராஜாயியின் அழகைக் கண்டு, அவருக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளார். இவர் தான் பின்னாளில் தமிழ் சினிமாவை ஆட்சி செய்த கனவுக்கன்னி டி.ஆர். ராஜகுமாரி. 1941-ம் ஆண்டு வெளியான 'கச்ச தேவயானி'  திரைப்படம் தான் இவர் அறிமுகமான முதல் படம்.

டி.ஆர்.ராமண்ணா

டி.ஆர்.ராஜகுமாரியின் சகோதரர் தான் டி.ஆர்.ராமண்ணா. இயக்குனர் தயாரிப்பாளராக இருந்த இவர், எம்.ஜி.ஆர், சிவாஜி இணைந்து நடித்த ஒரே படமான கூண்டுக்கிளி படத்தை தயாரித்து இயக்கியிருந்தார். இந்த வாரிசு வரிசையில் அடுத்து வந்தவர், டி.ஆர். ராஜகுமாரியின் மருமகள் குசலகுமாரி. இவர் 1970களில் பல படங்களில் நடித்திருக்கிறார்.

ஜெயமாலினி மற்றும் ஜோதி லட்சுமி

குசலகுமாரிக்கு அடுத்த தலைமுறையில் வந்தவர்கள்,  ஜெயமாலினி மற்றும் ஜோதி லட்சுமி. இவர்கள் இருவரும் எஸ்.பி.எல்.தனலட்சுமியின் மகள்கள். 1980களில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளனர். இவர்களின் கவர்ச்சி நடனம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. எம்.ஜி.ஆர் நடிப்பில் 1963-ம் ஆண்டு வெளியான பெரிய இடத்து பெண் திரைப்படத்தில் ஜோதிலட்சுமி 'காட்டோடு குழலாட' பாடல் மூலம் பிரபலமானார்.

அதேபோல் பாலா இயக்குனராக அறிமுகமான 'சேது'  படத்தின் ஹிட் பாடலான 'கனா கருங்குயிலே' உள்ளிட்ட பல பாடல்களுக்கு நடனமாடியுள்ளார். 1978-ம் ஆண்ட வெளியான ஜகமோகினி திரைப்படங்கள் மூலம் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் தான் ஜெயமாலினி, இவர்கள் இருவரும் இணைந்து 800க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கின்றனர்.
ஜோதி லட்சுமியின் மகள் ஜோதி மீனா

இந்த சினிமா குடும்பத்தின் கடைசி ஜோதி லட்சுமியின் மகள் ஜோதி மீனா. 1990களில் பல படங்களில் நடித்திருந்த இவர் சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி நடித்த 'உள்ளத்தை அள்ளித்தா'  படத்தில் கவுண்டமணிக்கு ஜோடியாக நடித்திருப்பார்.  விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ள இவர், பாடல்களுக்கு நடனமும் ஆடியுள்ளார். இவருடைய தந்தை ஒரு கேமராமேன், இதன் மூலம் இக்குடும்பம் கேமராத் துறைக்குள்ளும் தன் தடத்தைப் பதித்துள்ளது.

பிளாக் அண்ட் வொயிட் தொடங்கி டிஜிட்டல் சினிமாவை தமிழ் சினிமாவை ஆட்சி செய்த இந்த குடும்பத்தில் இருந்து இன்று யாருமே சினிமாவில் இல்லை. கடைசி வாரிசான ஜோதி மீனா ஒரு மருத்துவரைத் திருமணம் செய்துகொண்டு, செட்டில் ஆகிவிட்டார். அவரது மகனும் ஒரு மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: