கவுண்டமணி தான் ஹீரோ; மு.க.ஸ்டாலினை அசரவைத்த இந்த படம்: அரசாங்கத்தில் ஏற்படுத்திய மாற்றம் என்ன தெரியுமா?
தாழ்த்தப்பட்ட மக்களுக்காக எடுக்கப்பட்ட இந்த படத்தை பார்த்தவர்கள் பாராட்டினார்கள். அப்போது நான் சொந்த ஊர் செல்லும்போது எனக்கு எதிர்ப்புகள் அதிகம் இருந்தது என்று இயக்குனர் வி.சேகர் கூறியுள்ளார்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்காக எடுக்கப்பட்ட இந்த படத்தை பார்த்தவர்கள் பாராட்டினார்கள். அப்போது நான் சொந்த ஊர் செல்லும்போது எனக்கு எதிர்ப்புகள் அதிகம் இருந்தது என்று இயக்குனர் வி.சேகர் கூறியுள்ளார்.
நான் எடுத்த படத்தை அடிப்படையாக வைத்து அரசாங்கத்தில் பெரிய மாற்றம் வந்திருந்தாலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக படம் எடுத்ததால் என்னை ஊருக்குள் விடவில்லை என்று இயக்குனர் வி.சேகர் கூறியுள்ளார்.
Advertisment
1990-ம் ஆண்டு வெளியான நீங்களும் ஹீரோதான் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் தான் வி.சேகர். நிழல்கள் ரவி, சில்க் ஸ்மிதா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருந்த இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிப்படமாக அமைந்துது. அதன்பிறகு, நான் புடிச்ச மாப்பிள்ளை, ஒன்னா இருக்க கத்துக்கணும், வரவு எட்டனா செலவு பத்தனா, காலம் மாறிப்போச்சு உள்ளிட்ட பல படங்களை இயக்கி வெற்றி கண்டார்.
தான் இயக்கிய முதல் 7 படங்களில் 6 படங்கள் கவுண்டமணி செந்தில் காம்போவை வைத்து காமெடியில் கலக்கி இருப்பார் வி.சேகர். பெரும்பாலும் இவர் இயக்கிய படங்கள் பெண்களுக்கும், குடும்பத்தற்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். முதல் படம் இயக்கியபோது தன்னை புரட்சி இயக்குனர் என்றும், அடுத்தடுத்த படங்களை பார்த்தவர்கள் இவர் குடும்ப இயக்குனர் என்றும் அழைத்தனர். ஆனால் இந்த படத்தை இயக்கியதால் பெண்களின் இயக்குனர் என்று சொன்னதாக வி.சேகர் கூறியுள்ளார்.
லிட்டில் டாக்கீஸ் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், ஒன்னா இருக்க கத்துக்கணும் என்று ஒரு படம் எடுத்தேன். சிறுவயதில் நான் என் ஊரில் பார்த்த ஒரு சம்பவத்தை அடிப்படையாக வைத்து சுடுகாட்டு வெட்டியானின் வாழ்க்கையை படமாக எடுத்தேன். கவுண்டமணி இந்த படத்தில் நாயகனாக நடித்திருந்தார். படமும் பெரிய வெற்றிப்படமாக அமைந்த்து. அந்த படம் ரிலீஸ் ஆன சமயத்தில் ஒரு சாவு வீட்டுக்கு சென்றிருந்தேன். அப்போது மு.க.ஸ்டாலின், மா.சுப்பிரமணியன் வந்தனர்.
Advertisment
Advertisements
என்னை பார்த்த மா.சுப்பிரமணியன், ஸ்டாலினிடம் தலைவரே இவர் தான் அந்த படத்தை எடுத்த்து. சென்னையின் மேயராக என்னை நியமித்தீர்களே அப்போது நான் ஒரு வேலை செய்தேன். சுடுகாட்டு வெட்டியானுக்கு எல்லாம் சம்பளம் போட்டேன் என்று சொன்னார். நான் எடுத்த அந்த படத்தை பார்த்து தான் இந்த திட்டத்தை செயல்படுத்தியதாகவும் கூறினார். நான் எடுத்த அந்த படம் அவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் இந்த படத்தை எடுத்தால் எனது ஊரில் ஒரு மறக்க முடியதா நிகழ்வு நடந்த்து.
தாழ்த்தப்பட்ட மக்களுக்காக எடுக்கப்பட்ட இந்த படத்தை பார்த்தவர்கள் பாராட்டினார்கள். அப்போது நான் சொந்த ஊர் செல்லும்போது தாழ்த்தப்பட்ட மக்கள் என்னை பார்த்து எங்கள் வாழ்க்கையை படமாக எடுத்துவிட்டீர்கள் என்று பாராட்டி மோர் கொடுத்தார்கள் நானும் குடித்துவிட்டு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தேன். ஊருக்குவந்து ஒரு மணி நேரம் ஆகுது, இன்னும் ஆள் வரவில்லை. இங்கு இருக்கிறேன் என்று ஊருக்கு தெரிந்துவிட்டது.
அப்போது அவர்கள் என்னிடம் ஒரு மாதிரியாக நடந்துகொண்டார்கள். நான் பெரிய இடத்து பையன் என்பதால் அப்படியே விட்டுவிட்டார்கள். சாதாரண நபராக இருந்திருந்தால் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்திருப்பார்கள் என்று வி.சேகர் கூறியுள்ளார்.