Advertisment

ஆடு ஜீவிதம் முதல் அட்லஸ் வரை : இந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் படங்கள்!

ஒடிடி தளத்தில் இந்த வாரம் வெளியாகும் உலக படங்கள் குறித்து ஒரு பார்வை

author-image
WebDesk
New Update
the Goat Life

இந்த வார ஒடிடி வெளியீடுகள்

இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளில் வெளியாகும் பல படங்கள் ஒரு சில மாதங்களில் ஒடிடி தளத்தில் வெளியாகிவிடுகிறது. இதில் இந்தியாவில் வெளியாகும் படங்களில் இந்தி படங்கள் 8 வாரங்கள் கழித்தும், தமிழ் படங்கள் 4 வாரங்கள் கழித்தும் ஒடிடி தளங்களில் வெளியிடப்படுகிறது. இதன் மூலம் ஒரு படம் வெளியாகி ஒரு சில வாரங்களில் மக்கள் அதை தங்கள் வீடுகளில் இருந்தே பார்த்துக்கொள்ள முடிகிறது.

Advertisment

உள்ளூர் படங்கள் மட்டுமல்லாமல் உலக படங்கள் வரை சினிமா ரசிகர்கள் பலரும் தங்கள் இருந்த இடத்தில் இருந்தே பார்த்து வருகின்றனர். அந்த வகையில் இந்த வாரம் ஒடிடி தளங்களில் வெளியாகும் உலக படங்கள் முதல் உள்ளூர் படங்கள் வரை ஒரு சிறிய தொகுப்பை பார்க்கலாம்.

அக்வாமேன் அண்ட் தி லாஸ்ட் கிங்டம்: ஜேசன் மோமோவா மீண்டும் அக்வாமேனாக நடித்துள்ள இந்த ஆக்‌ஷன் ஃபேண்டஸி வகையான படத்தை இப்போது ஜியோ சினிமாவில் பார்க்கலாம்.

டெஸ்ட் சீசன் 3: ஆஸ்திரேலியா கிரி்ககெட் அணியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த டெஸ்ட் வெப் சிரீஸின் 3-வது சீசன் இன்று (மே 23ஆம் தேதி) பிரைம் வீடியோவில் வெளியாகிறது. ஏற்கனவே வெளியான 2 சீசன்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், 3-வது சீசனுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

குட் ஹேண்ட்ஸ் 2 இல்: உணர்வுகளின் ரோலர் கோஸ்டரை அனுபவிக்க விரும்பும் சினிமா ரசிகர்களுக்கு குட் ஹேண்ட்ஸ் திரைப்படம் ஒரு புது அனுபவத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் இன்று, (மே 23) நெட்ப்ளக்ஸில் வெளியாகிறது.

க்ரவ்: விமானப் பணிப்பெண்களாக தபு, கரீனா கபூர் கான் மற்றும் கிருத்தி சனோன் ஆகியோர் நடித்துள்ள இந்த படம் நாளை (மே 240 ஜியோ சினிமாவில் வெளியாக உள்ளது. திருட்டை மையப்படுத்தி ஒரு காமெடி படமாக வெளியாகிறது

அட்லஸ்: இயக்குனர் பிராட் பெய்டனின் சைன்ஸ் பிஃஷன் படமான அட்லஸ் படத்தில் ஜெனிபர் லோபஸ் நடித்துள்ளார். ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் படமான இப்படம் மே 24ஆம் தேதி (நாளை) நெட்ஃபிளகஸில் வெளியாகிறது.

கர்தாஷியன்ஸ் சீசன் 5: புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோ மே 23 அன்று ஹுலுவில் வெளியிடப்பட உள்ளது.

ஆடுஜீவிதம் (தி கோட் லைஃப்): பிரித்விராஜ் சுகுமாரனின் அசத்தலான நடிப்பில் திரையரங்குகளில் மாபெரும் வெற்றியை பெற்ற ஆடுஜீவிதம் படம் வரும் மே 26-ந் தேதி டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது.

தி பீச் பாய்ஸ்: இசை ஆர்வலர்களுக்கான இந்த ஆவணப்படம் வரும் மே 24 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment