ஒடிடி தளங்களில் வளர்ச்சி திரைப்படங்களை பார்க்க தியேட்டருக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளது என்று சொல்லலாம். ஒரு படம் வெளியாகி எவ்வளவு பெரிய வெற்றியை பெற்றாலும் அடுத்த 4 வாரங்களில் அந்த படம் ஒடிடி தளத்தில் வெளியாகிவிடும் வீட்டில் இருந்தபடியே பார்த்துக்கொள்ளலாம் என்று மக்கள் நினைத்து விடுவதால், ஒரு படம் திரையரங்கில் வெளியாகும்போது இருக்கும் எதிர்பார்ப்பை விட ஒடிடி தளத்தில் வெளியாகும்போது எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது.
அந்த வகையில் கடந்த வாரம், விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான பாயும் ஒளி நீ எனக்கு உள்ளிட்ட சில படங்கள் ஒடிடி தளத்தில் வெளியானது. இதனைத் தொடர்ந்து இந்த வாரம் சில படங்கள் ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இதில் குறிப்பாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி வடிவேலு பகத் பாசில் உள்ளிட்டடோர் நடித்த மாமன்னன் திரைப்படம் உட்பட சில வெப் தொடர்களும் வெளியாக உள்ளது.
சிங்க்
முதல் நீ முடிவும் நீ என்ற படம் மூலம் கவனம் ஈர்த்த நடிகர் கிஷன் தாஸ் நடிப்பில் வெளியான ஹாரர் படம் சிங்க். விகாஸ் ஆனந்த் ஸ்ரீதரன் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில், மோனிகா, சௌந்தர்யா பாலா நந்தக்குமார், நவீன் ஜார்ஜ் தாமஸ், நந்தினி வினோத், சுப்ரியா ராவ், கலையரசி, ஷீலா விஸ்வநாத், கார்த்திக் கிருஷ்ணா, ஹரி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படம் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
மாமன்னன்
உதநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலுவின் மாறுபட்ட நடிப்பில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில்,வெளியாக படம் மாமன்னன். கடந்த ஜூன் மாதம் இறுதியில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த படம் வரும் ஜூலை 27-ந் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது.
ரெஜினா
சுனைனா நாயகியாக நடித்துள்ள ரெஜினா படம் தமிழ், மலையாளம் என இரண்டு மொழியில் ஜூன் 23ந் தேதி திரையரங்கில் வெளியானது. மலையாள இயக்குனர் டோமின் டி சில்வா இயக்கத்தில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில், ரெஜினா படம் நாளை (ஜூலை 25) அமேசன் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
கால்கூட் வெப் தொடர்:
இயக்குநர் அருணாப் குமார் இயக்கி கால்கூட் என்ற வெப் தொடரில் விஜய் வர்மா நாயகனாக நடித்துள்ளார். அஜித் அந்தரே, அம்ரித்பால் சிங் பந்த்ரா மற்றும் ஆனந்த் திவாரி ஆகியோர் தயாரித்துள்ள இந்த வெப் தொடர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, பெங்காலி மற்றும் போஜ்புரி உள்ளிட்ட 7 மொழிகளில் வரும் ஜூலை 27ந் தேதி முதல் ஜியோ சினிமாவில் வெளியாக உள்ளது.
தி விட்சர் சீசன் 3
ஹென்றி கேவில், ஃப்ரேயா ஆலன், அன்யா சலோத்ரா, ராபி அமெல், மெங்கர் ஜாங், ஹக் ஸ்கின்னர், கிறிஸ்டெல் எல்வின் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள தி விட்சர் சீசன் 3 வெப் தொடர் வரும் ஜூலை 27-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
கேப்டன் ஃபால்
கிறிஸ்டோபர் மெலோனி, லெஸ்லி-ஆன் பிராண்ட் மற்றும் அந்தோனி கேரிகன் ஆகியோர் நடித்த ஆங்கில அனிமேஷன் வெப் தொடரான கேப்டன் ஃபால் ஜூலை 28ந் தேதி முதல் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“