மோகன்லால் முதல் சூர்யா வரை; ஓ.டி.டி தளத்தில் வெளியாகும் பெரிய படங்களில் உங்க பேவரெட் எந்த படம்?

சூர்யாவின் ரெட்ரோ முதல் நானி நடித்த ஹிட் 3-வது பாகம் வரை இந்த வாரம் பெரிய படங்கள் ஒடிடி தளங்களில் வெளியாகியுள்ளது.

சூர்யாவின் ரெட்ரோ முதல் நானி நடித்த ஹிட் 3-வது பாகம் வரை இந்த வாரம் பெரிய படங்கள் ஒடிடி தளங்களில் வெளியாகியுள்ளது.

author-image
WebDesk
New Update
Mohanlal Surya

வார இறுதி வந்துவிட்டது. இந்த இந்த வாரம், ஒடிடி தளங்களில் பார்க்க, சிறந்த திரைப்படங்கள், தொடர்கள் வெளியாகியுள்ளன. அவை குறித்த சுருக்கமான தகவல்களை இங்கே காணலாம்:

Advertisment

தொடரும் (Thudarum) - மலையாளம்

ரன்னி என்ற அமைதியான மலைப்பகுதியில் நடக்கும் கதை இது. சண்முகம் (மோகன்லால்) ஒரு எளிய டாக்ஸி டிரைவர். அவருக்கு மிகவும் பிடித்தமான சொத்து அவருடைய பழைய அம்பாசிட்டர் கார். எதிர்பாராத விதமாக வாழ்க்கையில் ஒரு சவால் வரும்போது, அவர் எதை மிகவும் நேசிக்கிறாரோ அந்த காரை பாதுகாக்க அவர் எந்த எல்லைக்கும் செல்லத் தயாராகிறார். படத்தின் உணர்வுப்பூர்வமான ஆழமும், எளிமையான கதையும், சிறந்த இயக்கமும், மோகன்லாலின் நடிப்புத் திறனும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த படம் இன்று (மே 30) ஜியோஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது.

ரெட்ரோ - தமிழ்

Advertisment
Advertisements

தலைப்பைப் போலவே, 'ரெட்ரோ' ஒரு பழமையான காலகட்டத்தில் நடக்கும் கதை. சூர்யா பாரிவேல் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் தாதாவாக இருக்குமு் ஜோஜு ஜார்ஜின் வளர்ப்பு மகன். தனது வன்முறை நிறைந்த கடந்த காலத்திற்கும், ருக்மணி (பூஜா ஹெக்டே) உடனான அமைதியான வாழ்க்கைக்கான விருப்பத்திற்கும் இடையே பாரிவேல் ஒரு மீட்புப் பயணத்தைத் தொடங்குகிறார். சூர்யா மற்றும் பூஜா ஹெக்டே முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், பிரசாந்த், சுஜித் சங்கர் மற்றும் அம்ரின் அபுபக்கர் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் நாளை (மே 31) வெளியாகிறது.

கண்கஜூரா - இந்தி

ரோஷன் மேத்யூ மற்றும் மோஹித் ரைனா ஆகியோர் நடித்துள்ள இந்தத் தொடரை சந்தன் அரோரா இயக்கியுள்ளார். கண்கஜூரா ('KanKhajura') என்பது இஸ்ரேலியத் தொடரான மெக்பை ('Magpie') இன் இந்தி தழுவல். இந்த பரபரப்பான உளவியல் குற்றத் தொடர் தனிப்பட்ட அதிர்ச்சி, சிக்கலான உறவுகள் மற்றும் தார்மீகக் குழப்பம் போன்ற கருப்பொருள்களை ஆராய்கிறது. இந்த படம் சோனிலிவ்வில் இன்று (மே 30) வெளியாகியுள்ளது.

எ கம்பளீட் அன்நோன்- ஆங்கிலம்

ஜேம்ஸ் மங்கால்ட் இயக்கியுள்ள இந்தத் திரைப்படத்தில் டிமோதி சாலமே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். எ கம்பளீட் அன்நோன் ('A Complete Unknown') புகழ்பெற்ற பாடகர்-பாடலாசிரியர் பாப் டிலானின் ஆரம்ப கால வாழ்க்கையை விவரிக்கிறது. அவர் நட்சத்திரமாக உயர்ந்ததையும், இசை உலகில் அவர் ஏற்படுத்திய கலாச்சார புரட்சியையும் இப்படம் காட்டுகிறது. ஜிஹோ ஹாட்ஸ்டாரில் நாளை (மே 31) வெளியாகிறது.

ஹிட்: தி தேர்டு கேஸ்- தெலுங்கு

சைலேஷ் கொலானு இயக்கியுள்ள ஹிட் தொடரின் மூன்றாவது பாகம் இது. நானி அர்ஜுன் சர்க்கார் என்ற குற்ற தடுப்புப் பிரிவின் அதிரடி அதிகாரியாக நடிக்கிறார். தொடர்ச்சியான கொடூரமான கொலைகளைத் துப்பறியும் பணியில் அவர் ஈடுபடுகிறார். அர்ஜுன் வழக்கத்திற்கு மாறான ஆனால் மிகவும் பயனுள்ள முறைகளைப் பயன்படுத்துகிறார். விசாரணை தீவிரமடையும்போது, நீதிக்கும்  மீறலுக்கும் இடையிலான எல்லைகள் மங்கத் தொடங்குகின்றன. அதன்பிறகு என்ன நடந்தது என்பது தான் இந்த படத்தின் கதை. நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் இந்த படம் மே 30-ந் தேதி வெளியானது.

Tamil Cinema News Tamil Cinema Update

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: