பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான திரைப்படங்கள் தற்போது ஒடிடி தளங்களில் வெளியாகி வருவது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக திரைத்துறையில் பண்டிகை நாட்களில் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாவது வழக்கம். பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகும் இந்த படங்கள் கலவையாக விமர்சனங்களை பெற்றாலும் கூட வசூலில் பெரிய சாதனையை நிகழ்த்தி விடுவது வழக்கமான நடந்து வரும் ஒரு நிகழ்வு.
அந்த வகையில் கடந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழில் விஜய் நடிப்பில் வாரிசு, அஜித் நடிப்பில் துணிவு ஆகிய படங்கள் வெளியானது. அதேபோல் தெலுங்கில் முன்னணி நடிகர்களாக பாலகிருஷ்ணா நடிப்பில் வீர சிம்ஹா ரெட்டி, சிரஞ்சீவி நடிப்பில் வால்டர் வீரய்யா உள்ளிட்ட படங்கள் வெளியானது. இந்த படங்கள் அனைத்துமே வசூலில் நல்ல வரவேற்பை பெற்றது.
துணிவு
திரையரங்குகளில் இந்த படங்களை கண்டு ரசித்த ரசிகர்களுக்கு தற்போது இந்த படங்களை வீட்டில் இருந்தே பார்க்கும் வகையில் ஒடிடி தளங்களில் வெளியாகியுள்ளது. இதில் வங்கி கொள்ளை சம்பவம் தொடர்பாக வெளியான துணிவு கடந்த ஜனவரி 11-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், கடந்த பிப்ரவரி 8-ந் தேதி ஒடிடி தளமான நெட்ஃபிளிக்ஸில் வெளியானது.
அஜித், சமுத்திரக்கனி, மஞ்சுவாரியார் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த துணிவு படத்தை எச்.வினோத் இயக்கி இருந்தார். படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்ததது.
வாரிசு
அதேபோல் பொங்கல் தினத்தை முன்னிட்டு துணிவு படத்துடன் ஜனவரி 11-ந் தேதி விஜய் நடிப்பில் வெளியான வாரிசு பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் குறைவைக்காத வாரிசு 300 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டது. விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், பிரபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்த வாரிசு படம் தெலுங்கில் வாரசூடு என்ற பெயரில் வெளியிடப்பட்து.
வாரிசு படம் வெளியானி ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், தற்போது அமேசான் ப்ரைம் ஒடிடி தளத்தில் பிப்ரவரி 22-ந்’ தேதி வெளியிடப்பட்டுள்ளது. ஆக்ஷன் காமெடியுடன் குடும்ப பின்னணியில் திரைக்கதை அமைச்சப்பட்டிருந்த வாரிசு படத்தில் விஜய் வெகு நாட்களுக்கு பிறகு குடும்ப திரைப்படங்களில் நடித்திருந்தார்.
வீர சிம்ஹா ரெட்டி
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான பாலகிருஷ்ணா நடிப்பில் சங்கராந்தியை முன்னிட்டு ஜனவரி 12-ந் தேதி வெளியான படம் வீர சிம்ஹா ரெட்டி. ஹனிரோஸ், ஸ்ருதிஹாசன், துனியா விஜய், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்த இந்த படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெரிய அளவில் வெளியிடப்பட்டு வசூல் சாதனை நிகழ்த்தியது.
இந்நிலையில் வீர சிம்ஹா ரெட்டி திரைப்படம் டிஸ்னி + ஹாஸ்டாரில் இன்று (பிப்ரவரி 23) மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது. திரையரங்குகளில் தெலுங்கில் மட்டுமே வெளியான வீர சிம்ஹா ரெட்டி திரைப்படம் ஒடிடி தளத்தில் தெலுங்கு, தமிழ், ஹிந்தி கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.
வால்டர் வீரய்யா
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான சிரஞ்சீவி நடிப்பில் சங்கராந்தியை முன்னிட்டு வெளியான படம் வால்டர் வீரய்யா. போதை பொருள் கடத்தல் கும்பலை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் நாயகியாக நடித்திருந்தார். மேலும் ரவி தேஜா முக்கிய கேரக்.டரில் நடித்திருந்தார். ஜனவரி 13-ந் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த படம் வரும் பிப்ரவரி 27-ந் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/