Advertisment

வடக்குப்பட்டி ராமசாமி, மேரி கிறிஸ்துமஸ்... இந்த வார ஓ.டி.டி, தியேட்டர் ரிலீஸ் படங்கள் இவைதான்!

தமிழ்த் திரையுலகில் இந்த வாரத்தில் திரையில் மற்றும் ஓ.டி.டி தளங்களில் வெளியாகி மக்களின் வரவேற்பை பெற உள்ள திரைப்படங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
Tamil cinema OTT Streaming and theater release movies list for this week on march 8 2024 Tamil News

தமிழ் சினிமாவில் இந்த வார ஓ.டி.டி ஸ்ட்ரீமிங் மற்றும் தியேட்டர் ரிலீஸ் படங்கள்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Tamil Cinema News: தமிழ்த் திரையுலகில் ஒவ்வொரு வாரமும் ஏராளமான படங்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. இவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. திரையில் ஓடிய பல படங்கள் தற்போது ஓ.டி.டி தளங்களில் வெளியாகியும் வருகின்றன. அந்த வகையில், இந்த வாரத்தில் திரையில் மற்றும் ஓ.டி.டி தளங்களில் வெளியாகி மக்களின் வரவேற்பை பெற உள்ள திரைப்படங்கள் குறித்து இங்கு பார்க்கலாம். 

Advertisment

1. வடக்குப்பட்டி ராமசாமி - அமேசான் பிரைம்

இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம், மேகா ஆகாஷ், நிழல்கள் ரவி என பல முன்னணி முக்கிய பிரபலங்கள் நடித்திருக்கும் திரைப்படம் வடக்குப்பட்டி ராமசாமி. படத்தை தயாரிப்பாளர் டி.ஜி விஷ்வா பிரசாத் தயாரிக்க, இசையமைப்பாளர் சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார். நகைச்சுவை படமாக உருவாகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இப்படத்திற்குதமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு' சான்றிதழ் அளித்துள்ளது. 

2.  மேரி கிறிஸ்துமஸ் - நெட்ப்ளிக்ஸ்

பாலிவுட்டின் பிரபல இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப், ராதிகா சரத்குமார் என பலர் நடித்திருக்கும் திரைப்படம்மெர்ரி கிறிஸ்துமஸ். இப்படத்தை தயாரிப்பாளர் ரமேஷ் துராணி - ஜெய தௌராணி இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர்கள் டேனியல் பி. ஜார்ஜ் (பின்னணி இசை) & ப்ரீதம் (பாடல்கள்) என இருவர் இணைந்து இசையமைத்துள்ளனர். 

3. கார்டியன் 

இயக்குனர் சபரி மற்றும் குரு சரவணன் இணைந்து இயக்கியுள்ள திரில்லர் திரைப்படம் கார்டியன். இத்திரைப்படத்தில் நடிகை ஹன்சிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தினை தயாரிப்பாளர் விஜய் சந்தர் தயாரிக்க, இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

4. டெவில் - டெண்ட்கொட்டா

இயக்குனர் ஆதித்யா இயக்கத்தில் விதார்த், பூர்ணா, சுபா ஸ்ரீ, த்ரிகுன் என பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம் தான் டெவில். இப்படத்தை தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் தயாரிக்க, தமிழ் திரைப்பட பிரபல முன்னணி இயக்குனராக மிஸ்க்கின் இப்படத்திற்கு இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

திகில் - திரில்லர் திரைக்கதையில் சுவாரஸ்யமாக உருவாகியுள்ள டெவில் படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது. 

5. நந்திவரமன் - டெண்ட்கொட்டா

அறிமுக இயக்குனர் ஜி.வி பெருமாள் வரதன் இயக்கத்தில் சுரேஷ் ரவி, ஆஷா கவுடா என பலர் நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம் தான் நந்திவர்மன். படத்தை அருண்குமார் தனசேகர் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜெரால்டு பெர்லிக்ஸ் இசையமைத்துள்ளார்.

திரில்லர் திரைக்கதையில் சுவாரஸ்யமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு' சான்றிதழ் அளித்துள்ளது.

6. தூக்குதுறை - சிம்ப்ளி சவுத்

இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் யோகி பாபு, இனியா, ராஜேந்திரன், பாலா சரவணன் என பலர் நடித்திருக்கும் திரைப்படம் தூக்குதுறை. இப்படத்தினை தயாரிப்பாளர் அரவிந்த் வெள்ளைப்பாண்டியன் தயாரிக்க, இசையமைப்பாளர் மனோஜ் கே.எஸ் இசையமைத்துள்ளார்.

7. நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே

இயக்குனர் பிரசாத் ராமர் இயக்கத்தில் செந்தூர் பாண்டியன், ப்ரீத்தி கரண், சுரேஷ் மதியழகன், தமிழ் செல்வி என பல பிரபலங்கள் நடித்திருக்கும் திரைப்படம் நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே. தயாரிப்பாளர் பிரதீப் குமார் படத்திற்கு இசையமைத்துள்ளார். காதல் படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ் அளித்துள்ளது.

8. J பேபி

இயக்குனர் சுரேஷ் மாரி இயக்கத்தில் ஊர்வசி, அட்டகத்தி தினேஷ், லொள்ளுசபா மாறன் என பலர் நடித்திருக்கும் திரைப்படம் J பேபி. இப்படத்தினை பா.ரஞ்சித், அபே ஆனந்த் சிங், பியூஸ் சிங், ஸுரப் குப்தா மற்றும் அதிதி ஆனந்த் இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் டோனி ப்ரிட்டோ இசையமைத்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment