படையப்பா படத்தில் குழந்தை நட்சத்திரம்... இப்போது முன்னணி சீரியல் நடிகை : இவரை தெரிகிறதா?

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1999-ம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான படையப்பா படத்தில் ஒரு காட்சியில் குழந்தை ஒருவர் தோன்றியிருப்பார்.

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1999-ம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான படையப்பா படத்தில் ஒரு காட்சியில் குழந்தை ஒருவர் தோன்றியிருப்பார்.

author-image
WebDesk
New Update
Padiyappa Baby Hema Bindhu

படையப்பா படத்தில் ரஜினிகாந்த் - ஹிமா பிந்து

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் வலம் வரும் இவர் தற்போது தனது 170 படமாக டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதனிடையே ரஜினிகாந்த் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பலரும் தற்போது சினிமாவில் நடிகைகளாக மாறி வருகின்றனர். அந்த வகையில் படையப்பா படத்தில் ரஜினிகாந்துடன் ஒரு காட்சியில் வந்த நடிகை ஒருவர் சீரியல் நடிகையாக உருவாகியுள்ளார்.

Advertisment

அவர் தான் நடிகை ஹிமா பிந்து. சமீபகாலமாக தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் தனது நடிப்பு திறமையால் பலரிடம் இருந்து பாராட்டுக்களை பெற்று வரும் இவர், தனக்கென ஒரு பெயரைப் பெற்றுள்ளார்.  இதயத்தை திருத்தாதே, மந்தாகினி போன்ற உள்ளிட்ட சீரியல்களில் நடித்து சின்னத்திரையில் தனக்கென ஒரு பெயரைப் பெற்றவர் ஹிமா தற்போது இலக்கியா என்ற தமிழ் சீரியலில் நடித்து வருகிறார்.

Advertisment
Advertisements

இவர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1999-ம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான படையப்பா படத்தில் ஒரு காட்சியில் தோன்றியிருப்பார். ரஜினிகாந்தின் அறிமுகம பாடலான என் பேரு படையப்பா என்ற வைரமுத்துவின் பாடலில் ‘’பாசமுள்ள மனிதனப்பா நான் மீசை வைத்த குழந்தையப்பா’’ என்ற வரிகள் வரும்போது ரஜினிகாந்த் முகம் ஒரு குழந்தை முகமாக மாறும். அந்த குழந்தை முகம் தான் நடிகை ஹிமா பிந்து.

சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன் மற்றும் சௌந்தர்யா உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்திருந்த இந்த படத்தில், அப்பாஸ், லட்சுமி, ராதா ரவி மற்றும் நாசர் ஆகியோர் துணை வேடங்களில் நடித்திருந்தனர்.  கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான இதயத்தை திருடாதே என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில், அறிமுகமான ஹிமா பிந்து தான் குழந்தை நட்சத்திரமாக இருந்தபோது நடிகர் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படமும் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: