கடந்த 50 வருடங்களாக தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்ற அடையாளத்துடன் வலம் வருபவர் ரஜினிகாந்த். பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள இவருடன் குழந்தை நட்சத்திரமாக நடித்த பலரும் தற்போது தமிழ் சினிமாவில் தங்களை நிலைநிறுத்திக்கொண்டுள்ளனர். அந்த வகையில் ரஜினிகாந்த் படத்தில் குழந்தையாக ஒரு காட்சியில் வந்த ஒரு நடிகை தற்போது தமிழ் சினிமாவிலும் சீரியலிலும் நடிகையாக வலம் வருகிறார்.
1999 ஆம் ஆண்டு வெளியான ரஜினிகாந்தின் படையப்பா படத்தில் வரும் என் பேரு படையப்பா பாடலில் குழந்தையாக வந்த ஒரு நடிகை தான் ஹிமா பிந்து. இதயத்தை திருடாதே மற்றும் மந்தாகினி போன்ற தொடர்கள் மூலம் ஹிமா தனக்கென ஒரு பெயரைப் பெற்றுள்ளார். நந்தன் லோகநாதனுடன் இணைந்து நடிக்கும் இலக்கியா என்ற தமிழ் சீரியலில் அவர் தற்போது முன்னணியில் இருந்து வருகிறர். படையப்பா படத்தில், வைரமுத்து எழுதி ஏ.ஆர்,ரஹ்மான் இசையில் வெளியான "என் பேரு படையப்பா" பாடலில் குழந்தையாக இவர் நடித்திருப்பார்.
கே.எஸ். ரவிக்குமார் எழுதி இயக்கிய இந்தப் படத்தில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா அப்பாஸ், லட்சுமி, ராதா ரவி, நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த பாடலில், ‘’பாசமுள்ள மனிதனப்பா நான் மீசை வைத்த குழந்தையப்பா’’ வரிகள் வரும்போது ரஜினிகாந்த் ஒரு குழந்தை முகமாக மாறுவார். அப்போது வரும் குழந்தை தான் ஹீமா பிந்து. கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் இதயத்தை திருடாதே என்ற தினசரி சீரியலில் தொலைக்காட்சியில் அறிமுகமான ஹிமா, முன்னணி நடிகர்களுடன் தான் குழந்தைப்பருவத்தில் எடுத்த புகைப்படங்களுக்காக பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இந்த வைரலான படங்களில், பிரபல நடிகர் விஜய்யுடன் நடிகை போஸ் கொடுப்பது தனித்து நிற்கிறது. இந்தப் புகைப்படம் இப்போது சமூக ஊடகங்களில் கணிசமான கவனத்தைப் பெற்று வருகிறது. இணையத்தில் விரைவாகப் பிரபலமான தலைப்புகளாக மாறும் படங்கள் மற்றும் வீடியோக்களை நடிகை தொடர்ந்து தனது சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். சீரியல்களில் நடித்து வந்த ஹிமா பிந்து தற்போது லாரன்ஸ் இயக்கி வரும் காஞ்சனா படத்தின் 4-வது பாகத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.