/indian-express-tamil/media/media_files/XdIlDqlsdFTDMnlEBCZH.jpg)
பாண்டவர் பூமி படத்தில் அருண்விஜய் -ஷமிதா
சின்னத்திரை சீரியல்கள் வரவேற்பை பெற்று வரும் இன்றைய காலக்கட்டத்தில் சீரியலில் நடித்து வரும் நடிகர்கள் பலரும் சினிமாவில் ஓரிரு படங்களில் நடித்தவர்கள் தான். அந்த வகையில் தற்போது சின்னத்திரையின் முன்னணி சீரயில் நடிகையாக இருப்பவர் தான்ஷமிதா ஸ்ரீகுமார்.
சேரன் இயக்கத்தில் கடந்த 2001-ம் ஆண்டு வெளியான படம் பாண்டவர் பூமி. குடும்ப உறவுகளை மையமாக வைத்து அதில் பகையினால் ஏற்படும் ஆபத்துக்ளை இணைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த இந்த படத்தில் ராஜ்கிரன், சந்திரசேகர், ரஞ்சித் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த நிலையில், அருண் விஜய் ஹீரோவாக நடித்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் பெரிய வெற்றியை கொடுத்தது.
இந்த படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் தான் ஷமிதா ஸ்ரீகுமார். ஜீவா தாமரை என முதல் படத்திலேயே 2 வேடங்களில் நடித்து அசத்தினார். குறிப்பாக தாமரை என்ற கேரக்டரில் இவரின் நடிப்பு பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்த நிலையில், இவரின் பார்வையே பயத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. பாண்டவர் புமி படம் பெரிய வெற்றியை கொடுத்திருந்தாலும் ஷமிதாவுக்கு அதன்பிறகு வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதன் காரணமாக 2008-ம் ஆண் சன்டிவியின் சிவசக்தி என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான ஷமிதா, இந்த தொடரில் தன்னுடன் நடித்த நடிகர் ஸ்ரீகுமாரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பழம்பெரும் இசையமைப்பாளரான சங்கர் கணேஷின் மகன் தான் ஸ்ரீகுமார். அதன்பிறகு பிள்ளை நிலா, புகுந்தவீடு,மௌனராகம், பேரண்பு, உள்ளிட்ட சீரியல்களில் நடித்த ஷமிதா கடைசியாக பொன்னி சீரயிலில் நடித்திருந்தார்.
இதனிடையே சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் ஷமிதா, பிரபலங்கள் தங்கள் குடும்ப வாழ்க்கை குறித்த ரகசியங்களை பொதுவெளியில் பகிர்ந்து கொள்வதால் ஏற்படும் அசம்பாவிதங்கள் குறித்து உணர்ச்சிகரமாக பேசியுள்ளார்.சின்னத்திரை அல்லதுவெள்ளித்திரைவாய்ப்புகள் எல்லோருக்கும் எப்போதும் கிடைப்பதில்லை. அதேபோல், எல்லா பிரபலங்களுக்கும் அவரவர் தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது. தங்கள் குடும்பத்தில் நல்லது கெட்டதுகளை தங்களுடனே வைத்துக் கொள்வது நல்லது. இதைப் பற்றி பொதுவெளியில் பேசுவது பிரச்னையை மேலும் மோசமாக்கவே செய்யும் என்றும் இறுதிவரை தீர்வு கிடைக்காது என்றும் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.