விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இனி ஜீவாவுக்கு 2 மனைவி என்று மீனா சொல்லும் வீடியோ பதிவு இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். சகோதர பாசம், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, கூட்டுக்குடும்பம் உள்ளிட்ட பல தேவைகளை வலியுறுத்தும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல், இதில் நடித்து வரும் நடிகர் நடிகைகளுக்கும் தனியாக ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளது.
ஆனால் கடந்த சில வாரங்களாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் எதிர்மறையாக சென்றுகொண்டிருக்கிறது. ஒன்றாக இருந்த சகோதரர்கள் பிரிந்துவிட்டார்கள். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை காணாமல் போய்விட்டது. இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்களுக்கே தற்போது சீரியல் மீது சிறு அதிருப்தி ஏற்பட்டுள்ளது என்று சொல்லலாம். ஆனாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ்கான வரவேற்பு குறையவில்லை.
இந்நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடக்கும் விஷயங்கள் அவ்வப்போது வீடியோக்களாக வெளியாகவது வழக்கம் அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ பதிவில், மீனாவின் தங்கை ஜீவாவுக்கு தாலி கட்டிவிடுகிறார். இதை பார்த்த மீனா அந்த தாலியை எடுத்து மீண்டும் தனது தங்கை கழுத்திலேயே கட்டிவிட்டு இனி ஜீவாவுக்கு ரெண்டு பொண்டாட்டி என்று சொல்லிவிட்டு செல்கிறார்.
#PandianStores pic.twitter.com/riGlv5Xfqv
— Parthiban A (@ParthibanAPN) March 30, 2023
இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் இதற்கு தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil