scorecardresearch

பதான் பட செய்தியாளர்கள் சந்திப்பு : ஷாருக்கானை கட்டிபிடித்து முத்தம் கொடுத்த தீபிகா படுகோனே

ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும் பதான் படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார்.

பதான் பட செய்தியாளர்கள் சந்திப்பு : ஷாருக்கானை கட்டிபிடித்து முத்தம் கொடுத்த தீபிகா படுகோனே

மும்பையில் நடைபெற்ற பதான் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் படத்தின் நாயகி தீபிகா படுகோனே நடிகர் ஷாருக்கானுக்கு கட்டி பிடித்து முத்தம் கொடுத்தது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஷாருக்கான் நடிப்பில் 4 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான படம் பதான். ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். யாஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தில் ஷாருக்கானுடன், தீபிகா படுகோனே, ஜான் ஆப்ரஹாம், கேமியோ ரோலில் சல்மான்கான் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

குடியரசு தினத்தை முன்னிட்டு கடந்த ஜனவரி 25-ந் தேதி வெளியான பதான் படம்  5 நாள் முடிவில் இதுவரை உலகம் முழுவதும் 560 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளார். மேலும் 4 ஆண்டுகளுக்கு பின் ரீ-என்டரி கொடுத்துள்ள ஷாருக்கானுக்கு இந்த வெற்றி பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பல படங்களின் சாதனையை பதான் முறியடித்துள்ளது.

இந்நிலையில், பதான் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு மும்பையில் நடைபெற்றது. இதில் ஷாருக்கான், தீபிகா படுகோனே, ஜான் ஆப்ரஹாம், ஆகியோருடன் படத்தின் இயக்குனர் சித்தார்த் ஆனந்த் பங்கேற்றார். இதில் படத்தின் வெற்றி குறித்து உணர்ச்சி பொங்க பேசிய நாயகி தீபிகா படுகோனே, கண்கலங்கியபடி, சாதனைகளை முறியடிக்க போகிறோம் என்று நினைக்கவில்லை. இந்த வெற்றி ஒரு திருவிழா போன்ற உணர்வை தருகிறது.

ரசிகர்கள் அனைவரின் அன்பை பார்க்கும்போது இந்த படம் அதற்கு தகுதியானது தான் என்று கூறியுள்ளார். முன்னதாக ஷாருக் கான், ஜான் ஆபிரஹாம், தீபிகா படுகோனே மூவரும் பத்திரிக்கையாளர்களுக்கு போஸ் கொடுத்தனர். அப்போது ஷாருக்கானுடன் போஸ் கொடுத்த தீபிகா அவரை கட்டிபிடித்து முத்தம் கொடுத்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema pathaan movie deepika padukone kiss to shah rukh khan

Best of Express