ஒரு முறை ஹாஸ்டல் இட்லிக்கு கவிதை சொல்லிய கவியரசர் கண்ணதாசன், ஒரு ஹோட்டல் உரிமையாளர் தனக்காக ஒரு கவிதை கேட்டபோது பரோட்டாவை பற்றி கவிதை கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் கவிஞர், எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர், இயக்குனர் தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட கவியரசர் கண்ணதாசன், தன் வாழ்நாளில் தான் சந்தித்த அனுபவங்களை வைத்து பல பாடல்களை எழுதியுள்ளார். கண்ணதாசனின் கை வண்ணத்தில் வந்த பல பாடல்கள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதேபோல், வாழ்க்கையில் மனிதன் சந்திக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் கண்ணதாசன் தனது வரிகள் மூலம் ஆறுதல் கூறியுள்ளார்.
அதேபோல் ஒரு கவிஞர் – இசையமைப்பாளர் இடையே நெருக்கம் இருந்தது என்று எடுத்துக்கொண்டால் அதில் முன்னணியில் இருப்பர் கண்ணதாசன் – எம்.எஸ்.விஸ்வநாதனும் தான். இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத பல பாடல்களை கொடுத்துள்ளனர். மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் கண்ணதாசன் பல பாடல்களை எழுதியிருந்தாலும், எம்.எஸ்.வியுடன் இவர் எழுதிய அனைத்து பாடல்களுமே தனி ரகம் என்று சொல்லலாம்.
திரைப்பட பாடல்கள் மட்டுமல்லாமல், கவிதைகள் எழுதுவதிலும் வல்லவதாக இருந்த ஒருமுறை ஹோட்டல் ஒன்றுக்க சென்றுள்ளார். அந்த ஹோட்டல் உரிமையாளர் உடனடியாக வந்து, இந்த ஹோட்டல் குறித்து ஒரு கவிதை சொல்லுங்கள் என்று கேட்டுள்ளார். அப்போது பேப்பர் பேனா எடுத்துவா என்று சொல்லாமல், உடனடியாக எழுதிக்கோ என்று உன் ஹோட்டல் பெயர் என்னப்பா என்று கேட்டுள்ளார். இதற்கு அவர் ஹோட்டல் மராட்டா என்று கூறியுள்ளார்.
இதை கேட்ட கண்ணதாசன், எழுதிக்கோ என்று சொல்லிவிட்டு, ‘ஹோட்டல் மராட்டா, கூட்டம் வராட்டா, காசு தராட்டா, விற்காது பரோட்டா’ என்று கூறியுள்ளார். இந்த தகவலை அவரது மகள் விசாலி மலேசியாவில் நடைபெற்ற கண்ணதாசன் தொடர்பான விழாவில் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“