தமிழ் சினிமாவில் தனது கவித்துவத்தின் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள கண்ணதாசன், தனக்கு கொடுப்பதாக கூறிய டாக்டர் பட்டத்தை வேண்டாம் என்று மறுத்துள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
சினிமாவில், இயக்குனர் தயாரிப்பாளர் திரைக்கதை ஆசிரியர், என பன்முக திறமை கொண்ட கண்ணதாசன், அரசியலிலும் தனக்கான தனி இடத்தை அமைத்துக் கொண்டிருந்தார். அதே சமயம் திமுக காங்கிரஸ் தமிழ் தேசிய கட்சி என பல அரசியல் கட்சிகளுடன் பயணித்த கண்ணதாசன், எம்.ஜி.ஆர் கருணாநிதி உள்ளிட்ட பலரையும் பல மேடைகளில் விமர்சித்துள்ளார். அதே சமயம் அவர்கள் தனது கட்சியில் இருக்கும்போது பாராட்டவும் தவறியதில்லை.
அதேபோல், வழக்கறிஞர், பத்திரிக்கயைாளர், இயக்குனர் கதாசிரியர் என பன்முக திறமை கொண்ட சோ’’ கண்ணதாசனின் நெருங்கிய நண்பரும் கூட. அரசியல் விமர்சகர் என்ற பட்டத்துடன் வலம் வந்த சோ’’ அரசியல் கருத்துக்களை யார் சொன்னாலும், தனது பார்வையில் அதை விமர்சிப்பதை வழக்கமாக வைத்திருந்தார். ஆனாலும் தனிப்பட்ட முறையில் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர்.
அந்த வகையில், ஒருநாள், கண்ணதாசனை சந்தித்த ஒருவர் உங்களுக்கு டாக்டர் பட்டம் கொடுக்க இருக்கிறோம். அமெரிக்காவில் இருந்து இந்த பல்கலைகழகம் என்று ஒரு பல்கலைகழகத்தின் பெயரை கூறியுள்ளார். இதை கேட்ட கண்ணதாசன் ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும், இன்னொரு பக்கம் ‘’சோ’’விடம் கேட்டுக்கொள்ளலாம் என்று அவருக்கு போன் செய்து பேசியுள்ளார். எந்த விஷயமானாலும் தெளிவாக முடிவெடுக்கும் ‘’சோ’’ மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தனர் கண்ணதாசன்.
அந்த வகையில் இந்த டாக்டர் பட்டம் குறித்து ‘’சோ’’விடம் சொன்னபோது, கண்ணதாசனை சந்தித்த அந்த நபரின் பெயரை சரியாக சொன்ன ‘’சோ’’ வேண்டாம் கவிஞரே டாக்டர் பட்டம் வாங்கிவிடாதீர்கள். நீங்கள் வாங்கிவிட்டால் கண்ணதாசனுக்கே நாங்கள் தான் டாக்டர் பட்டம் கொடுத்திருக்கிறோம் என்று சொல்ல, பலரிடும் ரூ50 ஆயிரத்திற்கு மேல் வசூல் செய்துவிடுவார்கள் ஏமார்ந்துவிடாதீர்கள் என்று கூறியுள்ளார்.
இதை கேட்டு எச்சரிக்கையான கண்ணதாசன், அந்த டாக்டர் பட்டத்தை வேண்டாம் என்று மறுத்ததாக, அவரது மகன் அண்ணாதுரை கண்ணதாசன், ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“