தமிழ் சினிமாவில், ஒரு படத்தில் ஒரு கருத்து இருக்கும் 2 வெவ்வேறு பாடல்களை எழுதியுள்ள கவியரசர் கண்ணாதாசன், அந்த 2 பாடல்களையும் ஹிட்டாக கொடுத்துள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
Advertisment
மனித உணர்ச்சிகள் அனைத்திற்கு தனது வரிகள் மூலம் உயிர் கொடுத்தவர் கண்ணதாசன். எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் தொடங்கி, ரஜினிகாந்த் கமல்ஹாசன் வரை பல முன்னணி நடிகர்களுக்கு ஹிட் பாடல்களை கொடுத்த கண்ணதாசன், இசையமைப்பாளர் எம்.எஸ்.வியுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். அந்த வகையில் ஒரு படத்தில் ஒரே கருத்து இருக்கும் 2 பாடல்களை வார்த்தைகள் ரிப்பீட் இல்லாமல் எழுதி ஹிட் கொடுத்துள்ளார்.
இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் இயக்கத்தில், கடந்த 1979-ம் ஆண்டு வெளியான படம் நினைத்தாலே இனிக்கும். ரஜினிகாந்த் – கமல்ஹாசன் இருவரும் இணைந்து நடித்த கடைசி படமாக இந்த படத்தில், ஜெயபிரதா, கீதா, ஜெயசுதா ஆகியோர் நாயகிகளாக நடித்திருந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க, ஒரு பாடலை தவிர மற்ற அனைத்து பாடல்களையும் கவியரசர் கண்ணதாசன் எழுதிய நிலையில், அந்த ஒரு பாடலை கண்ணதாசனின் மகன் கண்மணி சுப்பு எழுதியிருந்தார்.
இந்திய சினிமாவில் அப்பா மகன் இணைந்து ஒரு படத்திற்கு பாடல் எழுதியது இதுவே முதல் முறையாகும். இந்த படத்தில் வரும் ‘’எங்கேயும் எப்போதும்’’ சம்போ சிவ சம்போ என இரு பாடல்கள் ஒரே மெட்டில் அமைந்திருக்கும். அதேபோல் வாழ்க்கையில், மகிழ்ச்சியை எப்போதும் விட்டுவிட கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த பாடல் அமைந்திருக்கும். குறிப்பாக இந்த இரு பாடல்களும் ஒரே கருத்து உள்ள பாடல்கள் என்றாலும், ஒரு பாடலுக்கும் இன்னொரு பாடலுக்கும் ரிப்பீட் வார்த்தைகள் இல்லாமல் எழுதியிருப்பார்.
இதில் எங்கேயும் எப்போதும் பாடலை, எஸ்.பி.பாலசுப்பிரமணியன், கமல்ஹாசனுக்காக பாடியிருந்த நிலையில், சம்போ சிவ சம்போ பாடலை ரஜினிகாந்துக்கான எம்.எஸ்.விஸ்வநாதன் பாடியிருந்தார். இந்த இரு பாடல்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதில் எங்கேயும் எப்போதும் பாடல் தனுஷ் நடிப்பில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான பொல்லாதவன் படத்தில் இடம் பெற்றிருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“