தனது இளம் வயதிலே பல க்ளாசிக் பாடல்களை கொடுத்து இளம் வயதிலேயே மறைந்து போன பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார் தான் வறுமையில் பசியும் பட்டினியுமாக இருந்த காலக்கட்டத்தில் கிழிந்த வேட்டிக்கு பாடல் எழுதிய சம்பவம் குறித்து தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய காலக்கட்டத்தில் பழைய பாடல்களை கேட்டு அந்த பாடல் எழுதிய கவிஞர்களை நாம் பாராட்டினாலும், அவர்கள் பிரபலமாவதற்கு முன்பு அவர்களின் வாழ்வில் சந்தித்த வறுமை, பசி உள்ளிட்ட துயரங்கள் குறித்து இப்போது நாம் தெரிந்துகொள்வது கொஞ்சம் கடினமான விஷயம் தான். அதற்கு முக்கிய காரணம் இன்றைய இளைஞர்கள் மத்தயில் புத்தகங்கள் படிக்கும் திறன் குறைந்து வருவது தான்.
அதே சமயம் இன்றைய காலக்கட்ட இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய கவிஞர்களில் ஒருவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார். 1930-ம் ஆண்டு பிறந்த இவர் தனது 29-வது வயதில் மரணமடைந்தார். ஆனாலும் தான் சினிமாவில் கால் பதித்த நாளில் இருந்து மரணத்தை தழுவுவது வரை தமிழ் சினிமாவின் பாடல்களில் தனது தனித்துவத்தை புகுத்தி வரவேற்பை பெற்றவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்.
இலக்கிய நடையில் பாடல்கள் ஒளித்துக்கொண்டிருந்த காலக்கட்டத்தில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் வார்த்தைகளை வைத்து பாடல் எழுதிய பட்டுக்கோட்டையார், தான் தினமும் பார்க்கும் அல்லது சந்திக்கும் சம்பவங்களை வைத்தும் பாடல்களை எழுதியுள்ளார். இதற்கு எடுத்துக்காட்டாக தனது கிழிந்த வேட்டிக்கு அவர் பாடிய பாடல் குறித்து தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் சினிமாவில் பாட்டு எழுத வாய்ப்பு தேடி அலைந்துகொண்டிருந்த காலக்கட்டத்தில், ஓ.ஏ.கே தேவர், நண்பர் ராமச்சந்திரன் ஆகியோருடன் ஒரு அறையில் தங்கியிரந்துள்ளார். அப்போது ஒருநாள் பட்டுக்கோட்டைக்கு பாடல் எழுத வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் அவரிடம் இருந்த இரு வேட்டியில் ஒன்றைய துவைத்து வைத்துள்ளார். மற்றொன்றை சலவைக்கு போட்டுள்ளார்.
ஆனால் சினிமா வாய்ப்பு கிடைத்துள்ளதால் தனது நண்பர் ராமச்சந்திரனை அனுப்பி சலவைக்கு போட் வேட்டியை வாங்கி வர சொல்லியிருக்கிறார். ஆனால் பழைய பாக்கி இப்போது வேட்டி சலவை செய்த பாக்கியை கொடுத்தால் தான் வேட்டி தரமுடியும் என்று சலவை தொழிலாளி கூறியுள்ளார். ஆனாலும் ராமச்சந்திரன் பட்டுக்கோட்டையாரின் சினிமா வாய்ப்பு குறித்து எடுத்து கூறி வேட்டியை வாங்கி வந்துள்ளார்.
அந்த வேட்டியை கட்டலாம் என்று விரித்தால், அது நடுவில் கிழிந்து இருக்கிறது. இதை பார்த்து அறையில் இருந்து எல்லோரும் அதிர்ச்சியாக பட்டுக்கோட்டையாரோ அதிர்ச்சி இல்லாமல் அதற்கு ஒரு பாடலை பாடுகிறார். ‘’ஓரம் கழிஞ்சாலும் ஒட்டு போட்டு கட்டிக்கலாம் இது நடுவே கிழிந்திருக்கே நாகரத்தினமே அதுவும் 4 முழம் வேட்டியடி நாகரத்தினமே, என்று பாடியுள்ளார். சாதாரன மக்கள் இந்த இக்கட்டான நிலையில், என்ன செய்வது என்று திகைத்திருந்தாலும் பட்டுக்கோட்டை பாடல் மூலம் விவரித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“