புலமைப்பித்தன் விரல்களுக்கு முத்தம் கொடுத்த எம்.ஜி.ஆர்; இந்த பாட்டுக்கு அவ்ளோ பெரிய மவுசு: ஆனா அவர் படத்திற்கு எழுதியது அல்ல!

எம்.ஜி.ஆருடன் நெருக்கமாக இருந்தாலும், அவ்வப்போது தனது மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவது புலமைப்பித்தனின் குணம். அதேபோல் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக செயல்பட்டவர் தான் புலமைப்பித்தன்.

எம்.ஜி.ஆருடன் நெருக்கமாக இருந்தாலும், அவ்வப்போது தனது மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவது புலமைப்பித்தனின் குணம். அதேபோல் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக செயல்பட்டவர் தான் புலமைப்பித்தன்.

author-image
WebDesk
New Update
Pulamai Pithasn Mocv

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு தனது வரிகளால் பல ஹிட் பாடல்களை கொடுத்த கவிஞர் புலமைப்பித்தன், எழுதிய ஒரு பாடைலை பார்த்து அவரை வெகுவாக பாராட்டி அவரது கைக்கு முத்தும் கொடுத்தாக அந்த வரிகளை கவிஞர் பழனிபாரதி தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

கோவை மாவட்டத்தை சேர்ந்த புலமைப்பித்தன், 1964-ல் சாந்தோம் உயர்நிலை பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றிக்கொண்டே திரைப்படங்களில் பாடல் எழுதுவதற்காக முயற்சி செய்துள்ளார். அவரது முயற்சிக்கு பலனளிக்கும் வகையில், 1968 இல் எம்.ஜி.ஆர் நடித்த குடியிருந்த கோயில் படத்திற்காக எழுதிய ’நான் யார் நான் யார்’ என்ற பாடல் அவரை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது.

அதன்பிறகு அடிமைப் பெண் படத்தில் எழுதிய ’ஆயிரம் நிலவே’ பாடல் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.  தொடர்ந்து எம்.ஜி.ஆரின் பல படங்களுக்கு ஹிட் பாடல்களை எழுதிய புலமைப்பித்தன், திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியது மட்டுமல்லாமல், "புரட்சித்தீ", "பாவேந்தர் பிள்ளைத்தமிழ்" ஆகிய கவிதை புத்தகங்களையும், "எது கவிதை" என்ற புத்தகத்தையும் எழுதி இருக்கிறார்.

எம்.ஜி.ஆருடன் நெருக்கமாக இருந்தாலும், அவ்வப்போது தனது மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவது புலமைப்பித்தனின் குணம். அதேபோல் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக செயல்பட்டவர் தான் புலமைப்பித்தன். அதேபோல் இவர் எழுதிய பல பாடல்கள், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டும் அல்லாமல், எம்.ஜி.ஆர் மனதிலும் புலமைப்பித்தனுக்கு தனி இடத்தை பெற்று கொடுத்தது என்று சொல்லலாம்.

Advertisment
Advertisements

அந்த வரிசையில் புலமைப்பித்தன் எழுதிய ஒரு பாடலை பார்த்துவிட்டு, அவரின் கைகளுக்கு முத்தம் கொடுத்து எம்.ஜி.ஆர் பாராட்டியதாக கவிஞர் பழனி பாரதி தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அந்த பாடல், ‘இனங்களிலே என்ன இனம்  பெண்ணினம்’ என்ற பாடல். 1976-ம் ஆண்டு வெளியான நல்ல பெண்மணி என்ற படத்தில் இந்த பாடல் இடம் பெற்றுள்ளது. ஜெயகாந்தன் இயக்கிய இந்த படத்தில் முத்துராமன் நாயகனாக நடித்திருந்தார். ஸ்ரீவித்யாவுக்கும் முத்துராமனுக்கும் இந்த பாடல் படத்தில் இடம் பெற்றிருந்தது.

இந்த படத்திற்கு, வி.குமார் இசையமைத்திருந்தார். இலக்கண நயத்துடன் எழுதப்பட்ட இந்த பாடல், இன்றைக்கு கேட்டாலும், மனதை கவரும் வகையில், தனது வரிகளால் பலரையும் ஈர்த்திருப்பார் புலமைப்பித்தன். செப்டம்பர் 8-ந் தேதி அவரின் பிறந்த நாளை முன்னிட்டு கவிஞர் பழனி பாரதி இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.

Tamil Cinema Update Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: