பாடல் ஆசிரியராக தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி ஆன சினேகன் தற்போது சீரியல் நடிகராக அறிமுகமாக உள்ளதாக கதவல் வெளியாகியுள்ளது.
1997-ம் ஆண்டு புத்தம்புது பூவே என்ற படத்தின் மூலம் பாடல் ஆசிரியராக அறிமுகமானவர் சினேகன். அவரது துரதிஷ்டவசமாக அந்த படம் வெளியாகவில்லை. அதன்பிறகு, 2000-ம் ஆண்டு தம்பி ராமையா இயக்கத்தில் வெளியான மனுநீதி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல வெற்றிப்படங்களுக்கு ஹிட் பாடல்களை கொடுத்தவர் தான் சினேகன்.
குறிப்பாக, பாண்டவர் பூமி, மௌனம் பேசியதே, ஏப்ரல் மாதத்தில், சொக்க தங்கம், சாமி, மன்மதன், கழுகு உள்ளிட்ட படங்களில் சேரன் எழுதிய பாடல்கள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பாடல் ஆசிரியராக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த சினேகன், பிக்பாஸ் முதல் சீசனில், போட்டியாளராக பங்கேற்று இறுதிவரை பிக்பாஸ் வீட்டில் இருந்தார். இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் சினேகன் பிரபலமானார்.
யோகி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான சினேகன், கோமாளி, பூமி, உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்த சினேகன், கடைசியாக அருண்விஜய் நடிப்பில் வெளியான யானை படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். அதேபோல் சின்னத்திரையில், பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்திருந்த சினேகன் தற்போது முழுநேர சீரியல் நடிகராக மாற உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2020/03/Sun-TV-news-Reader-Anitha-Sampath.jpg)
சினேகனின் மனைவி கானிகா ரவி ஏற்கனவே சன்டிவியின் கல்யாண வீடு சீரியலில் நாயகியாக நடித்திருந்த நிலையில், தற்போது அடுத்து சீரியல் வாய்ப்பு இல்லாமல் இருந்து வரும் நிலையில், தற்போது அவரது கணவர் சினேகன் சீரியலில் நடிக்க உள்ளார். இவர் நடிக்கும் சீரியல், கலைஞர் டிவியில் ஒளிபரப்பாக உள்ளதாகவும், இந்த யாரடி நீ மோகினி, மற்றும் நினைத்தாலே இனிக்கும் சீரியலை இயக்கி வரும் இயக்குனர் ப்ரியன் என்பவர் இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதே சமயம், இந்த சீரியலில், சினேகனுக்கு ஜோடியாக பிக்பாஸ் பிரபலம் அனிதா சம்பத் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் சமீபத்தில் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்திருந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். சினேகன் – அனிதா சம்பத் சீரியல் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“