தமிழ் சினிமாவில் தனது வாழ்நாளின் கடைசி வரை வாலிப கவிஞர் என்று போற்றப்பட்டவர் தான் வாலி. இவரிடம் உதவியாளராக சேர வேண்டும் என்று நினைத்த பலரும் பின்னாளில் பெரிய ஆளாக மாறியுள்ளனர். அந்த வகையில் முன்னணியில் வந்தவர் தான் இயக்குனர், பாடல் ஆசிரியர், இசையபமைப்பாளர் என பன்முக திறமையுடன் வலம் வருகிறார். அவர் யார் தெரியுமா?
Advertisment
தமிழ் சினிமாவில், எம்.ஜி.ஆர் சிவாஜி தொடங்கி, ரஜினி கமல், விஜயகாந்த், சூர்யா சிம்பு வரை 5 தலைமுறை நடிகர்களுக்கு தனது வரிகள் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்த வாலி, கவியரசர் கண்ணதாசன் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் அவருக்கு போட்டியாக வந்தவர். இருவருக்கும் இடையில் போட்டி இருந்தாலும், தனிப்பட்ட முறையில் நெருங்கிய நண்பர்களாகவும் இருந்துள்ளனர். சினிமாவில் பாடல் எழுத வேண்டும் என்ற ஆசையுடன் சென்னை வந்த வாலி, பல போராட்டங்களுக்கு பிறகு சினிமாவில் பாடல் எழுத தொடங்கியுள்ளார்,
ஒரு கட்டத்தில் முன்னணி கவிஞராக வளர்ந்த வாலியிடம் உதவியாளராக சேர வேண்டும் என்று விரும்பி அவருக்கு கடிதம் எழுதியவர் தான் கங்கை அமரன். அதன்பிறகு தனது அண்ணன் மூலமாக சினிமாவில், அறிமுகமான கங்கை அமரன், இயக்குனர், இசையமைப்பாளர், பாடகர், பாடல் ஆசிரியர், டப்பிங் கலைஞர் என பன்முக திறமையுடன் வலம் வந்தவர். இவர், தான் வாலியிடம் உதவியாளராக சேர வேண்டும் என்று ஆசைப்பட்டது குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
ஒருமுறை, வாலிசார் எழுதிய பாடல்களைக் கேட்ட அமர்சிங், அவரிடம் உதவியாளராகச் சேர வேண்டும் என்ற கனவுடன் சென்னைக்கு வந்தார். ரங்கராஜபுரத்தில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்று, தான் எழுதிய பாடல்களை அவரிடம் காட்டினார். அப்போது வாலி, "உன்னை யார் வரச் சொன்னார்கள்?" என்று கேட்டபோது, அமர்சிங், "கண்ணதாசன் ஐயா, உதவியாளர் பஞ்சு அருணாச்சலம் என்று வருகிறது. ஆனால் உங்களுக்கு உதவியாளர் யாரும் இல்லை அதுக்குதான் நான் வந்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
Advertisment
Advertisements
இதைக் கேட்டு வாலி சிரித்துவிட்டார். "பாடலுக்கு எதுக்குடா உதவி? நானே எழுதிக்கொள்வேன்" என்று கூறிவிட்டார். அன்பிறகு, பத்ரகாளி படத்திற்கு பாடல் எழுத வரும்போது என்னை பார்த்துவிட்டு, அமர்சிங்கா வாயா என்று சொல்லி அருகில் அமர வைத்துக்கொண்டார். நீங்க பாட்டு சொல்லணும் நான் எழுதவும். என் வாழ்க்கை லட்சியம் முடியனும் என்று கூறி கங்கை அமரன் அவரிடம் கூறியுள்ளார். அப்போது எழுதிய பாடல் தான் கண்ணன் ஒரு கைக்குழந்தை என்ற பாடல். இந்த பாடலும் வெற்றி பெற்றது. எனக்கும் வாலி சார் ரொம்ப பிடிக்கும் என்று கங்கை அமரன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.