/indian-express-tamil/media/media_files/2025/03/19/uweyFKpzMe4U1JYXH5KM.jpg)
தன் வாழ்நாளின் இறுதிவரை வாலிப கவிஞர் எனறு அழைக்கப்பட்ட வாலி, 5 தலைமுறை நடிகர்களுக்கு ஹிட் பாடல்களை கொடுத்துள்ள நிலையில், அவர் பாடலுக்காக மும்பை டான்சர்கள் 3 நாட்கள் காத்திருந்தனர். 3-வது நாள் மாலையில் எழுதப்பட்ட அந்த பாடல், இன்றுவரை பெரிய ஹிட் பாடல்களில் ஒன்றாக இருக்கிறது.
தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் சிவாஜி தொடங்கி தற்போதைய முன்னணி நடிகர் சிம்பு வரை பல நடிகர்களுக்கு ஹிட் பாடல்களை கொடுத்துள்ளவர் வாலி. அதேபோல் எம்.எஸ்.வி, கே.வி.மகாதேவன் தொடங்கிய இன்றைய ஏ.ஆர்.ரஹ்மான் வரை பல இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார். எம்.ஜி.ஆர் படங்களுக்கு தொடர்ந்து பாடல்கள் எழுதிய வாலி, அவருக்காக ஏராளமான ஹிட் பாடல்களை கொடுத்து இன்று வரை அந்த பாடல்கள் ரசிகர்கள் மனதில் இடம்பெறும் வகையில், அமைத்துள்ளார்.
அதேபோல் சிவாஜி தொடங்கி இன்றைய முன்னணி நடிகரான சிம்பு வரை பல நடிகர்களுக்கு ஹிட் பாடல்களை கொடுத் வாலி, இயக்குனர் ஷங்கரின் படங்களில் பாடல்கள் வரவேற்பை பெறுவதற்கான காரணத்தை பற்றி கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் ஷங்கரின் படங்களில் பாடல்கள் தனி இடத்தை பிடித்துள்ளனர். பெரும்பாலும் இவரது படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையமைப்பார்.
தனது படங்களில் பாடல்கள் சிறப்பாக அமைய வேண்டும் என்று விரும்பும் ஷங்கர் அதற்காக எந்த எல்லைக்கும் போகக்கூடியவவர் என்று கூறியுள்ள கவிஞர் வாலி, பாடல் காட்சிக்காக பிரம்மாண்ட செட் அமைத்து டான்சர்ஸ் எல்லாம் இருந்தாலும், பாடல் வர தாமதமானால், அவர்களை காக்க வைப்பாதே தவிர, அவசர காதியில் ஒரு பாடலை எழுதி கொடுக்க சொல்லவே மாட்டார். ஒருமுறை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் ஷூட்டிங் தொடங்க இருந்தது.
மும்பையில் இருந்து 100 டான்சர்ஸ் ஜெய்பூர் ஹோட்டலில் தங்கியிருக்கின்றனர். இங்கு நான் எழுதிய பல்லவியை ஷங்கர் ஓகே செய்தால், பாடலை ஏ,ஆர்.ரஹ்மான் பதிவு செய்து ஷூட்டிங்கிற்காக ஜெய்பூர் அனுப்பிவிடுவார். ஷங்கர் என் வீட்டுக்கு பாடல் வாங்க வந்தபோது, பல்லவி சரியாக வரவில்லை. அவங்கள் ஷூட்டிங்கிற்கு வெயிட் செய்கிறார்கள் என்றால் எனக்கு பாட்டு வராது என்று வாலி கூறியுள்ளார்.
இதை கேட்ட ஷங்கர் 3 நாள் ஆனாலும் பரவாயில்லை என்று ஷங்கர் சொல்ல, 3-வது நாள் மாலையில், சுவற்றில் உடுப்பு போவது போல் காட்சி எடுக்க போகிறேன் என்று ஷங்கர் சொன்னார்., அதை வைத்து தான் இந்தியன் படத்தில் இடம்பெற்ற ‘’மாயா மச்சிந்திரா’’ என்ற பாடலை எழுதினேன் என்று கவிஞர் வாலி கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.