Advertisment

வாலி வாழ்க்கைக்கு உதவிய கண்ணதாசன் பாடல் : இந்த பாட்டில் இவ்வளவு அர்த்தம் இருக்கா?

தொடக்கத்தில் பல தடைகளை சந்தித்திருந்தாலும், அதன்பிறகு எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பாடல் எழுதி வெற்றிகளை குவித்தவர் வாலி.

author-image
WebDesk
New Update
Kannadasan Vaali

கண்ணதாசன் - வாலி

தமிழ் சினிமாவில் 5 தலைமுறை நடிகர்களுக்கு தனது வரிகள் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்த கவிஞர் வாலி, தான் எழுதிய அத்தனை பாடல்களுக்கும் ஊன்றுகோளாக இருந்தது கவிஞர் கண்ணதாசனின் ஒற்றை பாடல் வரிதான் என்று கூறியுள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவில் கண்ணதாசன் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் அவருக்கு போட்டியாக தமிழ் சினிமாவில் நுழைந்தவர் தான் கவிஞர் வாலி. தொடக்கத்தில் பல தடைகளை சந்தித்திருந்தாலும், அதன்பிறகு எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பாடல் எழுதி வெற்றிகளை குவித்தவர். ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆர் – கண்ணதாசன் இடையே மோதல் ஏற்பட்டபோது, எம்.ஜி.ஆருக்கு அஸ்தான் கவிஞராக மாறியவர் தான் கண்ணதாசன்.

அதேபோல் பாடல் ஆசிரியராக வாய்ப்பு தேடி அலைந்துகொண்டிருந்த கண்ணதாசன் ஒரு கட்டத்தில் விரக்தியடைந்து சென்னையை காலி செய்துவிட்டு மதுரையில் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு செல்வதாக புறப்பட்டுக்கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த அவரது நண்பரும் பாடகருமான பி.பி.ஸ்ரீனாவாஸ், சமீபத்தில் தான் பாடிய ஒரு பாடலை பாட அந்த பாடலை கேட்ட வாலி நான் ஊருக்கு போகவில்லை. சென்னையிலே இருந்து என் லட்சியத்தை நிறைவேற்ற போகிறேன் என்று உறுதி எடுத்துக்கொண்டார்.

அந்த சமயத்தில் பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடியது கண்ணதாசன் எழுதிய ஒரு பாடல் தான். அதேபோல் கண்ணதாசன் – வாலி இருவரும் அரசியல் மற்றும் சினிமா ரீதியான ஒருவரை ஒருவர் விமர்சித்துக்கொண்டாலும், இருவருக்குள்ளும் ஒரு அழகான நட்பும் இருந்துள்ளது. இதை இருவருமே பல இடங்களில் வெளிப்படுத்தியுள்ளனர். அதேபோல் கண்ணதாசனின் ஒரு பாடல் வாலி சென்னையை காலி செய்ய விடாமல் தடுத்த நிலையில், வாலியை கடைசிவரை வாலிப கவிஞராக வைத்திருக்கவும் ஒரு கண்ணதாசன் பாடல் பயன்பட்டுள்ளது.

இது குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ள கவிஞர் வாலி, நான் இன்டஸ்ரிக்கு வரும் முன்பே கண்ணதாசன் வந்துவிட்டார். அவரை போல் நானும் எழுதினால் எனக்கான அங்கீகாரம் கிடைக்காமல் போய்விடும் என்பதை உணர்ந்து நான் என் பாணியை மாற்றிக்கொண்டேன். அதனால் தான் என்னை நிலைத்திருக்க முடிந்தது. இந்த நிலைக்கும் வர முடிந்தது. ஆனால் என்னுடைய இளமையாக உணர்வுகளை என் பாடலில் பிரதிபலிக்க முக்கிய காரணம் கண்ணதாசனின் ஒரு பாடல் தான்.

அவரின் வரிகளில் கையளவே கிடைத்தாலும் கலங்கமாட்டேன், கடலளவே கிடைத்தாலும் மயங்க மாட்டேன் என்ற வரிகள் தான் என்னை இன்றுவரை வாலிப கவிஞராக வைத்திருக்கிறது. இந்த பாடல் வரிகளை ஒவ்வொரு மனிதனும் கடைபிடிக்க வேண்டும் அப்போ தான் அவனது வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று வாலி குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kannadasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment