/indian-express-tamil/media/media_files/2025/07/10/mgr-sivaji-2025-07-10-08-08-49.jpg)
தமிழ் சினிமாவில் 5 தலைமுறை நடிகர்களுக்கு தனது எழுத்துக்கள் மூலம் ஹிட் பாடல்களை கொடுத்த கவிஞர் வாலி, எம்.ஜி.ஆர் – ரஜினி இருவருக்கும் பாடல்கள் எழுதியுள்ள நிலையில், இருவருக்கும் இடையே உள்ள ஒற்றுமைகள் குறித்து தனது பாணியில் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் கண்ணதாசனுக்கு போட்டியாக பாடல் எழுத வந்து, பின்னாளில் அவருக்கு கடும் போட்டியாக இருந்தவர் தான் கவிஞர் வாலி. தொடர்ந்து எம்.ஜி.ஆருக்கு பாடல்கள் எழுதி வந்த கண்ணதாசன் ஒரு கட்டத்தில் கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்துவிட்ட நிலையில், கண்ணதாசன் இடத்தை நிரப்ப எம்.ஜி.ஆருடன் கை கோர்த்தவர் வாலி. இவர் எம்.ஜி.ஆருக்காக எழுதிய அனைத்து பாடல்களுமே பெரிய ஹிட் பாடல்கள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் ஒளித்துக்கொண்டு இருக்கிறது.
எம்.ஜி.ஆரை போல் இன்றைய முன்னணி நடிகராக இருக்கும் ரஜினிகாந்துக்கும் கவிஞர் வாலி பாடல்கள் எழுதியுள்ளார். குறிப்பாக ரஜினிகாந்த் பல விமர்சனங்களை கடந்து, தனது சினிமா வாழ்க்கையில் சரிவை வந்தித்தபோது அவருக்கு, தனது பாடல்கள் மூலம் மீண்டும் ஏற்றம் கொடுத்தவர் கண்ணதாசன் என்றாலும் அவரை விட ரஜினிக்கு அதிக பாடல்கள் எழுதியவர் கவிஞர் வாலி. இதனிடையே ஒரு பேட்டியில் கவிஞர் வாலி எம்.ஜி.ஆர் – ரஜினி இருவருக்கும் இடையே இருக்கும் ஒற்றுமைகளை பட்டியலிட்டுள்ளார்.
அந்த பேட்டியில், எம்.ஜி.ஆர் 3 எழுத்து, ரஜினிக்கும் 3 எழுத்து, இரண்டு பெயர்களுக்கும் இடையில் ஜி பொதுவாக இருக்கிறது. எம்.ஜி.ஆருக்கு மக்கள் மத்தியில் அதிக ரீச் இருந்தால்’ அவரது நன்கொடைகள் போக்குவரத்து எல்லாம் அதிகம் இருந்த அந்த காலக்கட்டத்தில், அவருடைய வன்மை குணம் என்.எஸ்.கே (என்.எஸ்.கிருஷ்ணன்) குணம் மாதிரி. அதற்கு ஈடு இணையே கிடையாது. ஆனால் இருவருக்கும் என்ன ஒன்னு என்றால் இருவருக்கும் கடவுள் கடாட்சம் இருக்கிறது.
கடவுள் கடாட்சம் அதிகம் இருந்ததது தான் அவர்களின் கரிஷ்மா பயங்கரமாக உயர்ந்தது. இரண்டு பேரும் உலகறிந்தவர்கள். எம்.ஜி.ஆரை சைனாவிலும் தெரியும்.
சிங்கப்பூர் மலேசியா போனாலும், சைனாகாரர்களுக்கு எம்.ஜி.ஆரைத்தான் பிடிக்கும். எம்.ஜி.ஆரும் கடல் கடந்து நேசிக்கப்படுகிறார். ரஜினிகாந்த் கேட்கவே வேண்டாம். அவரும் அந்த மாதிரி தான். எம்.ஜி.ஆர் கூடிய வரை தனது படங்களில், இந்த நற்பண்புகளுக்கு புறம்பான சில காரியங்களை மது அருந்துதல், புகைப்பிடித்தல், போன்ற காட்சிகளை செய்ய மாட்டார். அதேபோல் எம்.ஜி.ஆர் – ரஜினி இருவருமே வேறு மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்குள் வந்தவர்கள். ஆனால் தமிழ்நாட்டு மக்களின் உள்ளத்தை இருவருமே அள்ளிவிட்டார்கள் என்று கவிஞர் வாலி கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.