/indian-express-tamil/media/media_files/2025/03/19/uweyFKpzMe4U1JYXH5KM.jpg)
தமிழ் சினிமாவில், உசச்க்கட்டத்தில் இருந்த 3 நட்சத்திரங்கள், தங்கள் வாழ்நாளின் இறுதியில், பெரிய கஷ்டத்தை சந்தித்தாகவும், அவர்கள் மூவரையும் தன் வாழ்நாளில் வெவ்வேறு தருணத்தில் கவிஞர் வாலி சந்தித்தாகவும் பேச்சாளர், கவிதா ஜவகர் ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் கண்ணதாசன் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் அவருக்கு போட்டியாக தமிழ் சினிமாவில் நுழைந்தவர் தான் கவிஞர் வாலி. தொடக்கத்தில் பல தடைகளை சந்தித்திருந்தாலும், அதன்பிறகு எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பாடல் எழுதி வெற்றிகளை குவித்தவர். ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆர் – கண்ணதாசன் இடையே மோதல் ஏற்பட்டபோது, எம்.ஜி.ஆருக்கு அஸ்தான் கவிஞராக மாறியவர் தான் கண்ணதாசன்.
அதேபோல் பாடல் ஆசிரியராக வாய்ப்பு தேடி அலைந்துகொண்டிருந்த கண்ணதாசன் ஒரு கட்டத்தில் விரக்தியடைந்து சென்னையை காலி செய்துவிட்டு மதுரையில் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு செல்வதாக புறப்பட்டுள்ளார். அப்போது அங்கே வந்த அவரது நண்பரும் பாடகருமான பி.பி.ஸ்ரீனாவாஸ், சமீபத்தில் தான் பாடிய ஒரு பாடலை பாட அந்த பாடலை கேட்ட வாலி நான் ஊருக்கு போகவில்லை. சென்னையிலே இருந்து என் லட்சியத்தை நிறைவேற்ற போகிறேன் என்று உறுதி எடுத்துக்கொண்டார்.
அதன்பிறகு, மீண்டும் வாய்ப்பு தேடி எம்.எஸ்.விஸ்வநாதனால், பெரிய கவிஞராக உருவெடுத்த வாலி, பல முன்னணி நட்சத்திரங்களின் வாழ்க்கையை அருகில் இருந்து பார்த்தவர். ஒருநாள் அவரது வீட்டுக்கு வாடகை காரில் வந்து இறங்கிய ஒரு நடிகை, அண்ணே, நான் நாடகம் குழு தொடங்கலாம் என்று இருக்கிறேன். ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. அப்படியே இந்த டேக்ஸிக்கும் பணம் கொடுத்துவிடுங்களே என்று கூறியுள்ளார். பணமும் கொடுத்துவிட்டு அந்த நடிகைகயையும் வீட்டு வழியனுப்பி வைத்த வாலி அப்படியே உரைந்துபோயுள்ளார்.
பலருக்கும் அள்ளி அள்ளி கொடுத்த அந்த நடிகை தன் வாழ்நாளில் இறுதியில், பிழைப்புக்கே கஷ்டப்படுவதை வாலி பார்த்துள்ளார். அதேபோல் ஒருநாள் பாடல் கம்போசிங்கின்போது, ஒரு முன்னணி காமெடி நடிகர், உன்னிடம் வேலை பார்க்கும் பையனை அனுப்பி சிகரெட் வாங்கி வர சொல்லேன். பீடி பிடித்து பிடித்து ஒரு மாதிரி இருக்கிறது என்று கூறியுள்ளார். ஒரு காலத்தில் சினிமாவில் ஹீரோவை விட அதிகமாக சம்பாதித்த அந்த காமெடி நடிகர், மாடி வரைக்கு செல்லும் வகையில் கார் வைத்திருந்தவர். அவரின் நிலையை பார்த்து அதிர்ந்துள்ளார் வாலி.
அதேபோல் ஒருமுறை திருச்சியில் ரயிலில் போய் இறங்கிய வாலி, அங்கு ஒரு பெரியவர் அமர்ந்திருப்பதை பார்த்துள்ளார். அவரிடம் சென்று ஐயா நான் தான் கவிஞர் வாலி, என்று அறிமுகப்படுத்திக்கொண்டு ஆசீாவாதம் வாங்கியுள்ளார். அதன்பிறகு அவரை எங்கு செல்ல வேண்டும் என்று கேட்டு அனுப்பி வைத்துவிட்டு, அவரின் நிலையை பார்த்தும் அதிர்ச்சியில் இருந்துள்ளார். ஒரு காலத்தில் அவர் ரயிலில் வந்து இறங்கினால் அவரை பார்க்க மக்கள் கூட்டம் அலைமோதும். ரயில் அங்கிருந்து செல்லவே 10 நிமிடங்கள் ஆகும்.
இப்போது அவரை மதிக்க ஆள் இல்லை. அந்த மனிதர் தான் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகதவர். டேக்ஸியில் வந்த அந்த நடிகை சாவித்ரி, சிகரெட் கேட்ட அந்த நடிகர் வேறு யாரும் இல்லை சந்திரபாபு. எப்பேர்ப்பட்ட உயரத்தில், எத்தனை மனிதர்களால் கொண்டாடப்பட்ட மனிதர்கள். தங்க தட்டில் சாப்பிட்டு, மாடிவரை காரில் சென்றவர்கள் இவ்வளவு இங்கி வருகிறார்கள் என்றால் காலம் மிக மோசமானது. எனக்கு நானே சொல்லிக்கொண்டேன் அடக்கம் ஆகும் வரை அடக்கமாகவே இரு என்று வாலி கூறியதாக தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.