தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் முக்கிய இடங்களை பெற்ற தலைவர்களின் பட்டியலை எடுத்தக்கொண்டால் அதில் எம்.ஜி.ஆர் ஆண்ணா கருணாநிதி ஆகியோரின் பெயர்கள் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். அந்த அளவிற்கு அரசியலிலும் சினிமாவிலும் தங்களுக்கென தனி இடத்தை பெற்றுள்ள இவர்கள் மூவருமே பல கலைஞர்களை திரைத்துறையில் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
அந்த வகையில் பாடலாசிரியர் வாலி வாய்ப்பு தேடியபோது அவரின் திறமையை அறிந்து வாய்ப்பு கொடுத்தவர் தான் அண்ணா. 1959-ம் ஆண்டு வெளியான அழகர்மலை கள்வன் என்ற படத்தில் பாடல் ஆசிரியராக அறிமுகமானாலும் வாலிக்கு பெரிய புகழை பெற்று தந்நதது அண்ணா வசனத்தில் எம்.ஜி.ஆர் நடித்த நல்லவன் வாழ்வான் திரைப்படம் தான்.
1691-ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் எம்.ஜி.ஆர் ராஜசுலோச்சனா ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தில் இடம்பெற்ற அன்புக்கரத்தாலே குநதல அருவியிலே என்ற பாடலை வாலி எழுதியிருந்தார். இந்த பாடல் முதலில் எம்.ஜி.ஆருக்கு பிடிக்க வேண்டும் வசனம் எழுதும் அண்ணாவுக்கு பிடிக்க வேண்டும் என்று நினைத்து பயந்துகொண்டிருந்தாராம் வாலி.
ஆனால் எம்.ஜி.ஆர் அண்ணா இருவருக்குமே பாடல் பிடித்துபோன நிலையில், வாலிக்கு அண்ணா தனியாக பாராட்டும் தெரிவித்தாராம். திமுக பரபரப்பாக இயங்கி்கொண்டிருந்த காலக்கட்டத்தில் வந்த இந்த படத்தின் பாடலில் முதன் முதலாக உதயசூரியன் சின்னத்தை கொண்டு வந்தது வாலிதான். ஆனால் இந்த பாடல் ஒலிப்பதிவின்போது முதல்முறை தபேலா வாசித்தவரின் வாசிப்பு பிடிக்கவில்லை என்று எம்.ஜி.ஆர் ஒலிப்பதிவை கேன்சல் செய்துவிட்டார்.
அதன்பிறகு அடுத்தமுறை பாடலை பாடும் சீர்காழி கோவிந்தராஜன் வந்தாலும் பி.சுசிலா உடல்நிலை சரியில்லை என்பதால் வரவில்லை. இதனால் 2-வது முறையாக ஒலிப்பதிவு கேன்சல் ஆனது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருந்த வாலியின் பாடல் வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டு வேறு ஒரு பாடல் ஆசிரியரை நியமித்து பாடல் எழுத சொல்லியிருக்கிறார்கள். அவர் இந்த பாடலை படித்து பார்த்துவிட்டு நல்லதாத்தான் எழுதியிருக்கிறார். இதையே வைத்துக்கொள்ளலாம். அவரது பிழைப்பில் மண் போட நான் விரும்பவில்லை என்று சொல்ல நான் எழுதிய பாடல் 3-வது முறையாக ஒலிப்பதிவுக்கு சென்று வெற்றிகரமாக ஒலிப்பதிவு செய்யப்பட்டது.
அதன்பிறகு அந்த பாடல் காட்சி படமாக்கப்படும்போது செட் உடைந்துவிட்டது. இதனால் ஷூட்டிங் கேன்சல் ஆகிவிட்டது. அதன்பிறகு ஷூட்டிங் எல்லாம் முடிந்து படம் சென்சார் போகும்போது பாடலில் இடம்பெற்ற உதய சூரியன் மற்றும் எதையும் தாங்கும் இதயம் ஆகிய வார்த்தைகளை கட் செய்ய சொல்லிவிட்டார்கள் அந்த பாடல் இவ்வளவு இன்னல்களை தாண்டி வெளியானது என வாலி கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“