தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் இளையாராஜாவை முன்னணி பாடல் ஆசிரியராக இருந்த கவிஞர் வாலி சோதித்த தருண்ங்கள் தமிழ் சினிமாவில் நடந்துள்ளது.
க்ளாசிக் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக இருந்த ஜி.கே.வெங்கடேஷிடம் உதவியாளனராக இருந்தவர் இளையராஜா. கடந்த 1975-ம் ஆண்டு இயக்குனரும் தயாரிப்பாளருமான எல்.வி.பிரசாரத் இயக்கத்தில் வெளியான பிரியா விடை படத்திற்கு ஜி.கே.வெங்கடேஷன் இசையமைத்துள்ளார். முத்துராமன் பிரமிளா இந்த படத்தில் இணைந்து நடித்தனர்.
இந்த படத்தில் இசையமைத்த ஜி.கே.வெங்கடேஷிடம் உதவியாளராக பணியாற்றிய இளையராஜா ஹார்மோனியத்திடம் அமர்ந்திருந்துள்ளார். அப்போது பாடல் எழுதுவதற்காக கவிஞர் வாலி வந்துள்ளார். ஆனால் இந்த பாடலுக்கு இசை ஜி.கே.வெங்கடேஷ் அல்ல. இந்தியில் வெளியான ஒரு பாடல் இயக்குனர் எல்.வி.பிரசாத்க்கு பிடித்துபோக அதே இசையில் தமிழ் பாடல் தயார் செய்யுமாறு கூறியுள்ளார்.
இதற்காக பாடல் எழுத வந்த கவிஞர் வாலிக்கு கற்பனைக்கு எதுவும் எட்டாததால் அங்கிருப்பவர்களிடம் பேச்சு கொடுக்கிறார். அப்போது இளையராஜாவிடம் பெயர் என்ன என்று விசாரிக்க அவர் என் பெயர் ராஜா என்று கூறியுள்ளார். அதை வைத்தே ஒரு பாடல் எழுதுகிறேன் பார் என்று சொல்லிவிட்டு ராஜா பாருங்க ராஜாவை பாருங்க என்று பாடல் எழுதியுள்ளார்.
அதன்பிறகு இளைராஜா இசையமைப்பில் அன்னக்கிளி படம் வெளியாகி பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வீடுகிறது. இதனால் இளையராஜாவுக்கு வாய்ப்புகள் குவித்து வருகிறது. அப்போது ஏ.சி.திரிலோகசந்தர் பத்திரகாளி என்று ஒரு படத்தை எடுக்கிறார். இந்த படத்திற்கு பாடல் எழுத கவிஞர் வாலி வருகிறார். வழக்கமாக எம்.எஸ்.விஸ்வநாதன் தான் திரிலோகசந்தர் படங்களுக்கு இசையமைப்பார்.
ஒரு மாறுதலுக்காக இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார் என்ற செய்தியை கேட்டு கவிஞர் வாலி ஆச்சரியமடைகிறார். ஆனாலும் இளையராஜா மீது நம்பிக்கை இல்லாத வாலி இவருக்கு ஒரு டெஸ்ட் வைக்கிறார். நீங்கள் இசையமைப்பாளராக வந்துவிட்டீர்கள் ரொம்ப சந்தோஷம். அன்னக்கிளி பாடல் கேட்டேன். நன்றாக இருந்தது. ஆனால் உங்களுக்கு கர்நாடக சங்கீதம் அந்த அளவுக்கு ப்ரிட்சம் இருக்கா என்று கேட்டுள்ளார்,
இதை கேட்ட இளையராஜா ஓரளவுக்கு தெரியும் என்று சொல்ல, தியாகராஜரின் கீர்த்தனைகள் தெரியுமா என்று வாலி கேட்டுள்ளார். இதற்கும் ஓரளவுக்கு தெரியும் என்று இளையராஜா சொல்ல, தியாகராஜர் கீர்த்தனையில் திருப்பதி கோவிலில் திரை விலகும்போது பாடப்படும் ஒரு தெலுங்கு கீர்த்தனையை உங்களுக்கு தெரியுமா என்று வாலி கேட்டுள்ளார். இதற்கும் ஓரளவு தெரியும் என்று இளையராஜா சொல்ல அதை கொஞ்சம் பாடி காட்டுங்கள் என்று வாலி கூறியுள்ளார்.
வாலி தன்னை சோதிக்கிறார் என்று புரிந்துகொண்ட இளையராஜா அந்த கீர்த்தனையை அப்படியே வாசித்து பாடுகிறார். இதை கேட்ட வாலிக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனாலும் பரவால்லை இவர் மிகப்பெரிய ஆளாக வருவார் என்று சந்தோஷப்படுகிறார். அதன்பிறகு இளையராஜா சுட்சிவேஷன் சொல்ல கவிஞர் வாலி பாடல் எழுதுகிறார். அந்த பாடல் தான் கேட்டேலோ அங்கே அதை பார்த்தேலோ இங்கே என்ற பாடல்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“