/indian-express-tamil/media/media_files/7CoBSJEgzo8Okk0sgfsH.jpg)
கவிஞா வாலி
சிவாஜி நடித்த உணர்ந்த மணிதன் படத்திற்காக வாலிப கவிஞர் வாலி எழுதிய பாடலை பார்த்து பதட்டப்பட்ட ஏ.வி.மெய்யப்ப செட்டியார் உடனடியாக பாடல் வரிகளை மாற்றுமாறு கூறியுள்ளார்.
1968-ம் ஆண்டு சிவாஜி – வாணிஸ்ரீ கூட்டணியில் வெளியான படம் உயர்ந்த மனிதன். கிருஷ்ணன் பஞ்சு இயக்க்தில் வெளியான இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். அனைத்து பாடல்களையும் கவிஞர் வாலி எழுதியிருந்தார். பெரும் பணக்காரரான சிவாஜி ஒரு ஏழை பெண்னை காதலித்து திருமணம் செய்துகொள்வதால் சந்திக்கும் பிரச்சனை தான் இந்த படம்.
சிவாஜியின் தந்தை தன் சொல்படித்தான் அனைவரும் இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். ஆனால் அவரது மகனான சிவாஜி, அனைவரும் சமம் என்பது போல் ஒரு ஏழை பெண்ணை காதலித்து அப்பாவுக்கு தெரியாமல் திருமணமும் செய்துகொள்வார். ஒரு கட்டத்தில் இந்த திருமணம் குறித்து சிவாஜியின் அப்பாவுக்கு தெரியவர, அவர் அந்த பெண்ணை விட்டு சிவாஜியை பிரித்து வேறு ஒரு பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்துவிடுவார்.
அதன்பிறகு சிவாஜி என்ன செய்தார் என்பது தான் இந்த படத்தின் கதை. இதில் ஏழை பெண்ணை திருமணம் செய்துகொண்ட சிவாஜி முதலிரவுக்கு செல்லும்போது ஒரு ரொமான்டிக் பாடல் இடம் பெற்றிருக்கும். இந்த பாடல் தான் ‘’வெள்ளிக்கிண்ணம் தான் தங்க கைகளில் என்ற பாடல்’’. இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்ற பாடலான உள்ளது. அதே சமயம் இந்த படத்தின் தயாரிப்பாளரான ஏ.வி.மெய்யப்ப செட்டியார் தான் இந்த பாடல் வரிகள் மாற காரணம்.
இந்த பாடலை கவிஞர் வாலி முதலில் வெள்ளி தட்டு தான் தங்க கைககளில் என்று எழுதியுள்ளார். இதை படித்த ஏ.வி.மெய்யப்ப செட்டியார் வாலியை தனியாக அழைத்து என்ன வாலி இப்படி ஒரு அரச்சொல்லாக பாடலை எழுதி இருக்கீங்க வரிகளை மாத்துங்க என்று கூறியுள்ளார். வெள்ளி என்றால் பணம் தட்டு என்றால் தட்டுப்பாடு வெள்ளி தட்டுதான் என்றால் பணத்தட்டுப்பாடு வந்து தெருவுக்கு வந்துவிடுவோமா என்ற பயத்தினால் அவர் அப்பா கூறியுள்ளார்.
அதன்பிறகு தான் கவிஞர் வாலி இந்த பாடலை வெள்ளிக்கிண்ணம் தான் தங்க கைகளில் என்று மாற்றி கொடுத்துள்ளார். எம்.எஸ்.வி இசையில் வெளியான இந்த பாடலில் தம்பதிகளுக்கு இடையே நடக்கும் காதல் ஊடலை மையப்படுத்தி வரிகளை போட்டிருப்பார் கவிஞர் வாலி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us