தமிழ் சினிமாவில் முன்னணி கவிஞராக திகழ்ந்த வாலி, பாடல் எழுதும்போது பல சம்பவங்கள் நடந்துள்ள நிலையில், பாடகர் மனோ, பரோட்டாவை சாப்பிட்டு முடிக்கும் முன்பே ஒரு பாடலை எழுதி முடித்துள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் தொடங்கி இன்றைய சிம்பு வரை 5 தலைமுறை நடிகர்களுக்கு தனது பாடல்கள் மூலம் ஹிட் கொடுத்தவர் தான் கவிஞர் வாலி. தனது வாழ்வில் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள இவர் பல இயக்கனர்களின் படங்களில் பாடல்கள் எழுதியுளளார். அந்த வகையில், இயக்குனர் ஷங்கரின் முதல் படமான ஜென்டில்மேன் படம் தொடங்கி அனைத்து பாடத்திலும் பாடல்கள் எழுதியிருப்பார்.
ஜென்டில்மேன் படத்தை தொடர்ந்து, இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான 2-வது படம் காதலன். கடந்த 1994-ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் பிரபுதேவா, நக்மா, ரகுவரன், வடிவேலு, மனேரமா, எஸ்.பி.பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்த படத்திற்கு, வாலி 3 பாடல்களை எழுதியிருந்தார். இந்த 3 பாடல்களுமே ரசிகர்கள் மத்தியில் இன்றுவரை பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
அந்த வகையில் ‘’முக்காப்புல்லா’’ பாடலை யாரும் மறக்க முடியாது. புரியாத வார்த்தைகளால் இந்த பாடல் தொடங்கினாலும், இடையில் பாடலின் 90 சதவீத வார்த்தைகள் ஆங்கிலத்தில் இருக்கும் வகையில் வாலி எழுதியிருப்பார். இந்த பாடலுக்கான டியூனை அமைத்த ஏ,ஆர்.ரஹ்மான், வாலியிடம் கொடுத்துள்ளார். வாலி இந்த டியூனுக்கு பாடல் எழுதும் முன்பே, இந்த பாடலை பாட பாடகர் மனோ அங்கு வந்துவிடுகிறார்.
பாடகர் மனோ வருவதை பார்த்த கவிஞர் வாலி, நீங்கள் போய் சாப்பிட்டுவிட்டு வாங்க நான் பாடல் எழுதி முடிக்கிறேன் என்று வாலி அவரை வெளியில் அனுப்பியுள்ளார். இதை கேட்ட, பாடகர் மனோ வெளியில் சென்று பரோட்டா சாப்பிட்டுவிட்டு மீண்டும் ஸ்டூடியாவுக்கு திரும்பியுள்ளார். ஆனால் வாலி மனோ வருவதற்குள், இந்த பாடலை எழுதி முடித்துள்ளார். 90 சதவீதம் ஆங்கில வார்த்தைகளால் நிரம்பிய இந்த பாடலை மனோ மற்றும் சொர்னலதா பாடியிருந்தனர்.
இந்த பாடல் இன்றைக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் பிரபுதேவாவின் திரை வாழ்க்கையில் முக்கியமான பாடல்களில் ஒன்றாக இருக்கும் இந்த பாடலில் அவரின் நடனம் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.