/indian-express-tamil/media/media_files/2025/06/06/HASdyEXg2FkeO3ce7RXJ.jpg)
தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் சிவாஜி தொடங்கி தற்போதைய முன்னணி நடிகர் சிம்பு வரை பல நடிகர்களுக்கு ஹிட் பாடல்களை கொடுத்துள்ளவர் வாலி. அதேபோல் எம்.எஸ்.வி, கே.வி.மகாதேவன் தொடங்கிய இன்றைய ஏ.ஆர்.ரஹ்மான் வரை பல இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார்.
தமிழ் சினிமாவில் 5 தலைமுறை நடிகர்களுகளுக்கு தனது பாடல்கள் மூலம் ஹிட் கொடுத்து கடைசி வரை வாலிப கவிஞர் என்று அழைக்கப்பட்டவர் கவிஞர் வாலி. எம்.ஜி.ஆர் படங்களுக்கு தொடர்ந்து பாடல்கள் எழுதிய வாலி, அவருக்காக ஏராளமான ஹிட் பாடல்களை கொடுத்து இன்று வரை அந்த பாடல்கள் ரசிகர்கள் மனதில் இடம்பெறும் வகையில், அமைத்துள்ளார். அதேபோல் சிவாஜி தொடங்கி இன்றைய முன்னணி நடிகரான சிம்பு வரை பல நடிகர்களுக்கு ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.
வாலி எம்.ஜி.ஆருடன் அதிக நெருக்கமாக இருந்திருந்தாலும் அவர் படங்களை விடவும், சிவாஜிக்கு அதிக படங்கள் பாடல்கள் எழுதியுள்ளார். அதே சமயம் எம்.ஜி.ஆருக்கு இவர் எழுதிய பல பாடல்கள் எம்.ஜி.ஆரின் அடையாள பாடல்களாக இன்றும் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. தான் திரைத்துறையில் அறிமுகமான புதிதில் ஒரு சில படங்களுக்கு அனைத்து பாடல்களையும் வாலி எழுதியிருந்தாலும், அந்த படங்கள் அவருக்கு கை கொடுக்கவில்லை. அந்த நேரத்தில் எம்.எஸ்.வி தனது கற்பகம் படத்தில் வாய்ப்பு கொடுத்துள்ளார்.
அதன் மூலம் இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரித்த நிலையில், வாலிக்கு பல பாடல்கள் எழுதும் வாய்ப்ப கொடுத்த எம்.எஸ்.வி அவர் மீது அபார நம்பிக்கையும் வைத்துள்ளார். அதன்பிறகு ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆர் கண்ணதாசன் இடையே பிரிவு ஏற்பட்டபோது, எம்.ஜி.ஆருக்கு அஸ்தான கவிஞராக மாறிய வாலி பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். இதனிடையே எம்.ஜி.ஆர் சிவாஜி பாடல்கள் குறித்து பேசிய வாலி, எம்.ஜி.ஆருக்கு சிவாஜி பாடல் செட் ஆகும், ஆனால் சிவாஜிக்கு எம்.ஜி.ஆர் பாடல் செட் ஆகாது என்று கூறியுள்ளார்.
நான் எம்.ஜி.ஆருக்கு பல ஹிட் பாடல்கள் எழுதியிருந்தாலும், இந்த பாடல் இப்படி வரவேண்டும். இந்த வார்த்தைகளை போட்டு எழுதுங்கள் என்று எம்.ஜி.ஆர் என்னிடம் சொன்னது கிடையாது. உதாரணமாக பணத்தோட்டம் படத்தில் கண்ணதாசன் எழுதிய ‘என்னதான் நடக்கும் நடக்கட்டுமே’ என்ற பாடல் எம்.ஜி.ஆர் பாடுவார். அதே சமயம், இந்த பாடல் சிவாஜியும் பாடலாம். அவருக்கும் பொருத்தமாக இருக்கும். ஆனால், மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் என்ற பாடலை எம்.ஜி.ஆர் மட்டும் தான் பாட முடியும் சிவாஜி பாட முடியாது.
அதேபோல் யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க பாடலை எம்.ஜி.ஆர் சிவாஜி உள்ளிட்ட எந்த நடிகர்கள் வேண்டுமானாலும் பாடலாம். அதே சமயம், நான் ஆணையிட்டால் என்ற பாடலை எம்.ஜி.ஆர் தவிர சிவாஜி உட்பட மற்ற நடிகர்கள் யாரும பாட முடியாது. ஒரு ஹீரோவுக்கு இருக்கும் கரிஷ்மா, எம்.ஜி.ஆருக்கு இருந்தது. அந்த கரிஷ்மாவுடன் அரசியல் பின்னணி இருக்கிறது. அதனால் இந்த பாடல்களுக்கு அர்த்தம் இருக்கிறது என்று வாலி கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.