உதயநிதியிடம் கேட்கபோகிறேன் – வாரிசு தயாரிப்பாளர்
விஜய் நடித்த வாரிசு, அஜித் நடிப்பில் துணி என இரண்டு முன்னணி நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாவதால் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கும் நிலையில், இந்த படங்களுக்கு தியேட்டர் ஒதுக்குவதில் பெரிய சிக்கல் நீடித்து வருகிறது. இதில் துணிவு படத்தை வெளியிடும் உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகத்தில் 80 சதவீத தியேட்டர்களை பிடித்துவிட்டதாக கூறப்படும் நிலையில், தமிழகத்தில் அஜித்தை விட விஜய்தான் நம்பர் ஒன் இது பிஸினஸ் துணிவு பட விநியோகஸ்தர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாரிசு படத்தில் அதிக திரையரங்கு கேட்க போகிறேன் என்று வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜூ கூறியுள்ளார்.
வாரிசு இசை வெளியீட்டு விழாவுக்கு வரும் பிரபலங்கள்
விஜய் நடித்துள்ள வாரிசு படம் வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 12-ந்’ தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இதனிடையே வாரிசு படத்தின் டிரெய்லர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 24-ந்’ தேதி நடைபெற உள்ளது. இதில் ஐதாபாத்தில் நடைபெறும் இசை வெளியீட்டு விழாவில், மகேஷ்பாபு, பவன் கல்யாண் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாரிசு க்ளைமேக்ஸ் இப்படியா?
விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம வரும் ஜனவரி 12-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் க்ளைமேக்ஸ் எப்படி இருக்கும் என்பது குறித்து ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்புராயன் பேசியுள்ளார். இதில், வாரிசு திரைப்படத்தின் க்ளைமேக்ஸ் செம மாஸாக இருக்கும் என்றும், பயங்கரமான காட்கள் படமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தியேட்டர் உரிமையாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் நடிப்பில் வாரிசு, அஜித் நடிப்பில் துணிவு ஆகிய இரண்டு படங்களும் வெளியாக உள்ளதால் தியேட்டர் அதிபர்கள் சற்று கலக்கத்தில் உள்ள நிலையில், பண்டிகை காலங்களில் ஸ்பெஷல் ஷோ ஒளிபரப்ப அனுமதி கேட்டு தியேட்டர் உரிமையாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
அஜித்தை புகழ்ந்த ராஜமௌலி
பாகுபதி ஆர்ஆர்ஆர் படத்தின் மூலம் புகழ் பெற்ற இயக்குனர் ராஜமௌலி தற்போது அஜித் குறித்து புகழ்ந்து பேசியுள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர், பல நடிகர்கள் டை அடித்துக்கொண்டு விக் மாட்டிக்கொண்டு நடிக்கிறார்கள். ஆனால் தலைமுடிக்கு டை அடிக்காமல் உண்’மையான முடியுடன் நடிக்கலாம் என்று நிரூபித்தவர் அஜித் என்று கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil