பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில், அவர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் தயாரிப்பு நிறுவனம் தற்போது வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
பொன்னியின் செல்வன் என்ற வரலாற்று நாவலை தழுவி இயக்குனர் மணிரத்னம் இயக்கிய படம் பொன்னியின் செல்வன். 2 பாகங்களாக தயாரான இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியானது. விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம்ரவி, த்ரிஷா சரத்குமார், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி உள்ளிட்ட இந்தியாவின் 5 மொழிகளில் வெளியான பொன்னியின் செல்வன் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். லைகா நிறுவனம் தயாரித்திருந்த பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் 500 கோடிக்கு மேல் வசூல் சாதனை நிகழ்த்தியது. இதனால் படத்தின் 2-ம் பாகத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில், பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் குறித்து எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், ஷூட்டிங்கின்பொது திரைக்குப் பின்னால் நடந்த வீடியோ பதிவு ஒன்றை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் ஜெயம் ரவி, கார்த்தி இருவரும் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் தொடர்ச்சியான பொன்னியின் செல்வன் 2 பற்றி சில கதைக்கள விவரங்களைப் விவாதிக்கின்றனர்.
தொடர்ந்து இந்த வீடியோவில் நடிகர்கள் ஜெயம் ரவி, கார்த்தி மற்றும் விக்ரம் மூவரும் பார்வையாளர்களை வாழ்த்துகிறார்கள். தொடர்ந்து இரண்டாம் பாகத்திலிருந்து ரசிகர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று பேசியுள்ளனர். இந்த படத்தில் டைட்டில் ரோலில் நடித்த ஜெயம் ரவி, பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் இறுதியில் அவர் மற்றும் அவரது ஆட்கள் மீதான தாக்குதலுக்குப் பிறகு அவரது கதாபாத்திரம் தண்ணீரில் மூழ்கிவிடுவது போல் காட்சிபடுத்தியுள்ளனர். அவருடன் சேர்ந்து கார்த்தியும் மூழ்கிவிடுவார். அதே சமயம் இந்த வீடியோவில், கார்த்தி “நீங்கள் இதற்கு முன்பு பார்க்காத ஒன்றை நீங்கள் பார்ப்பீர்கள் என்று கூறி பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்தின் வெளியீட்டைச் சுற்றியுள்ள எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளார்.
மறுபுறம், ஒரு அழகான காதல் வில்லத்தனமாக மாறுவதை ரசிகர்கள் புரிந்துகொள்வார்கள். என்று விக்ரம் கூறியுள்ளார். பட்டத்து இளவரசர் ஆதித்ய கரிகாலன், நந்தினியை வெறித்தனமாக காதலிக்கிறார். ஆனால் நந்தினி வேறொருவரை மணந்துகொண்டார். இதனால் கரிகாலனுக்கு அவருக்கு துரோகம் மற்றும் அவநம்பிக்கையின் ஆழமான உணர்வை ஏற்படுத்தினார்.
இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய், ராணி நந்தினி மற்றும் பொன்னியின் செல்வன் 1 இன் இறுதியில் பொன்னியின் செல்வனை மீட்கும் ஒரு மர்மமான பெண் ஊமை ராணி என இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் ஐஸ்வர்யா ராய் மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்தார். கடைசியாக 2018 இல் வெளியான ஃபன்னி கான் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இதற்கிடையில், பொன்னியின் செல்வன் 2 ஏப்ரல் 28 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/