Advertisment

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா பொன்னியின் செல்வன் 2 : பிரபலங்கள் கருத்து என்ன?

பொன்னியின் செல்வன் முதல் பாகம் உலகளவில் ரூ500 கோடிக்கு மேல் வசூல் செய்து அசத்தியது.

author-image
WebDesk
New Update
Ponniyin Selvan1

பொன்னியின் செல்வன் 2

பொன்னியின் செல்வன் நாவலை தழுவி மணிரத்னம் இயக்கத்தில் தயாராகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் 2-ம் பாகம் இன்று வெளியாகியுள்ளது. விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

Advertisment

லைகா நிறுவனம் தயாரித்திருந்த இந்த படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். பொன்னியின் செல்வன் முதல் பாகம் உலகளவில் ரூ500 கோடிக்கு மேல் வசூல் செய்து அசத்தியது. முதல் பாதியின் முடிவு 2-ம் பாகத்திற்காக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

படத்திற்கு சில விமர்சகர்கள் கலவையான விமர்சனங்களை கொடுத்திருந்தாலும் தமிழ் வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ள பொன்னியின் செல்வன் படம் குறித்து பிரபலங்கள் பலருமத் தங்களது விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகர் கார்த்தி படத்தின் போஸ்டர் மற்றும் இயக்குனர் மணிரத்னத்துடன் அவர் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து குரு உங்களோடு செலவழித்த ஒவ்வொரு நொடியும் விலைமதிப்பற்றது என்று பதிவிட்டுள்ளார்.

பொன்னியின் செல்வன் 2 குறித்து நடிகர் சித்தார்த் வெளியிட்டுள் பதிவில், “மாஸ்டர் டெலிவரி செய்துள்ளார்.  பதிவுகள் கவிழட்டும்! பொன்னியின் செல்வன் காவியத்தின் இறுதிப்பகுதியை தவறவிடாதீர்கள்! பொன்னியின் செல்வன்-2 என்று பதிவிட்டுள்ளார்.

பொன்னியின் செல்வன் படம் வெளியாகும் முன்பே இந்த படத்தில் பெரிய பழுவேட்டரையர் கேரக்டரில் நடித்துள்ள நடிகர் சரத்குமார் வெளியிட்டுள்ள பதிவில், பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக உருவாக்கி, தமிழ்த்திரைத்துறை மற்றும் தமிழ் சமூகத்திற்கு உலகளாவிய பெருமை சேர்த்த இயக்குனர்  மணிரத்னம் அவர்களுக்கும், லைகா நிறுவனத்தின் சுபாஸ்கரன் அவர்களுக்கும், சக நடிகர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், பொன்னியின் செல்வன் 1 திரைப்படத்தை மாபெரும் வெற்றிப் படமாக்கி கொண்டாடிய ரசிக பெருமக்களுக்கும், பத்திரிகை மற்றும் ஊடக சகோதர, சகோதரிகளுக்கும் மனமார்ந்த நன்றியினைத் தெரிவிக்கிறேன். நாளை வெளிவரவிருக்கும் பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தில் திரையரங்கம் அதிரும் அளவிற்கு நீங்கள் தரும் வரவேற்பும், கொண்டாட்டமும், சோழ சாம்ராஜ்யத்தின் புகழை மேலும் கண்டங்கள் தாண்டி பரப்புவதற்கான உந்துதலை தரும்படி கொண்டாடி கண்டு மகிழுங்கள். சோழ சாம்ராஜ்யத்தின் தன அதிகாரி – பெரிய பழுவேட்டரையர் என்று பதிவிட்டுள்ளார்.

இயக்குனர் சுதா கொங்கரா தனது குருவான மணிரத்னம் பொன்னியினக் செல்வன் படப்பிடிப்பில் இருக்கும் வீடியோவை பகிர்ந்து மர குரு ராக்ஸ் ஆன் என்று பதிவிட்டுள்ளார்.

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பதிவில்,

பிஎஸ் 2 மன்னர்  மணிரத்னம் சார் அவர்களின் உண்மையான மேக்னம் ஓபஸ் நாம் அனைவரும் பெருமைப்படக்கூடிய படம் அருமை !! கரிகாலன் மற்றும் நந்தினியின் காதல் கதை இன்னும் ஹாட்ஸ் ஆஃப ஏ,ஆர்.ரஹ்மான், ரவிவர்மன்,  சியான் விக்ரம், ஐஸ்வர்யாராய், கார்த்தி, ஜெயரம் ரவி, தோட்டா தரணி, த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமுி மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.

இயக்குனர் மோகன் ராஜா தனது ட்விட்டர் பதிவில், மணிரத்னம் மாஸ்டர் ஸ்ட்ரோக்  ஒட்டு மொத்த டீமுக்கும் வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.

நடிகர் சிலம்பரசன் தனது ட்விட்டர் பதிவில், மணி சார் மற்றும் படக்குவினர் அனைவருக்கும் பொன்னியின் செல்வன் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பதிவில், மணி சார் & டீம் பொன்னியின் செல்வன் படக்குழுவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!! அற்புதமான நடிகர்கள் & குழுவினர் ஒரு பெரிய மற்றும் வலிமையான பிளாக்பஸ்டர் பெற வாழ்த்துக்கள்!! என்று பதிவிட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment