மணிரத்னம் இயக்கத்தில் தயாராகியுள்ள பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் முதல்நாள் வசூல் ரூ30 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி உருவாக்கப்பட்டுள்ள படம் பொன்னியின் செல்வன். 2- பாகங்களாக தயாராகியுள்ள இந்த படத்தை மணிரத்னம் இயக்கியுள்ள நிலையில், விக்ரம், கார்த்தி, ஜெயம்ராவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்,ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், 2-ம் பாகத்திற்கான எதிர்பார்ப்பையும் அதிகரித்து. இதனிடையே பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் நாளை (ஏப்ரல் 28) வெளியாக உள்ள நிலையில், படத்திற்கான ப்ரமோஷன் பணிகள் தற்போதுவரை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை (ஏப்ரல் 28) திரையரங்குகளில் வெளியாக உள்ள பொன்னியின் செல்வன் 2 நல்ல வசூலை அள்ளும் என்று கூறப்படும் நிலையில், பாக்ஸ் ஆபிஸில் எவ்வளவு வசூல் செய்யும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இது குறித்து தயாரிப்பாளர் மற்றும் திரைப்பட வணிக நிபுணரான கிரிஷ் ஜோஹர் கூறுகையில், பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் அனைத்து மொழிகளிலும் ஒரு அசாதாரண வணிகத்தை செய்துள்ளது,
பொன்னியின் செல்வன் 2-ம் பாகமும் அதையே செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. “டவுன் சவுத் பொன்னியின் செல்வன் முதல் பாகம் ரூ. 100 கோடியைத் தாண்டியது, இந்தியிலும் நல்ல வியாபாரம் செய்தது. இதன் காரணமாகத்தான் இரண்டாம் பாகத்திற்கும் இதையே எதிர்பார்க்கிறேன்” என்று ஜோஹர் கூறினார்,
வெளிப்படையாக இதில் ஐஸ்வர்யா ராய் பச்சன், மணிரத்னம் ஆகியோருடன், தென்னிந்தியத் திரையுலகைச் சேர்ந்த பெரிய நட்சத்திரங்கள், நடித்துள்ளதால் பொன்னியின் செல்வன் 2 தென்னிந்தியாவில் முதல் நாள் சுமார் ரூ 25 கோடியையும், இந்தியில் ரூ 2 கோடியையும் வசூல் செய்யும் என்று நான் எதிர்பார்க்கிறேன். அவர்கள் நிறைய ப்ரோமோஷன்கள் செய்து அனைத்து மொழிகளிலும் படத்தை பிரபலப்படுத்தியுள்ளனர். இதனால் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் 2 பாக்ஸ் ஆபிஸில் சிறப்பாகச் செயல்பட உதவும் என்று ஜோஹர் கூறியுள்ளார்.
இதேபோல், திரைப்பட விமர்சகர் மற்றும் விநியோகஸ்தர் அக்ஷயே ரதி, பொன்னியின் செல்வன் 2 உண்மையில் வேலை செய்வது, அதைச் சுற்றி உருவாக்கப்படும் பெரிய அளவு ப்ரமோஷன் தான் கூறினார். முதல்பாகம் மெதுவாகவும் சீராகவும் சென்றது, ஆனால் பொன்னியின் செல்வன் 2 அப்படி இல்லாமல் விறுவிறுப்பாக இருக் வாய்ப்புள்ளது. இப்போது மக்கள் கதைக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். அது எந்த அளவிற்கு உள்ளது என்பதை திரையில் தெரிந்துகொள்வார்கள், முன்னணி நடிகர்கள் மற்றும் மணிரத்னத்தின் கதை சொல்லும் ஆர்வத்தை வைத்து படத்திற்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில், பொன்னியின் செல்வன் அதிக வசூல் செய்த படமாக மாறியது, மேலும் பொன்னியின் செல்வன் 2 பாக்ஸ் ஆபிஸில் பொன்னியின் செல்வன் 1-க்கு மேல் செல்லவும் வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil