வாரிசு படம் ஓடிடி வெளியீடு எப்போது?
பொங்கல் தினத்தை முன்னிட்டு விஜய் நடிப்பில் வெளியான படம் வாரிசு. சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த, ஷாம் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்த இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்திருந்தார். கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வாரிசு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை வாரி குவித்த நிலையில், வரும் பிப்ரவரி 22-ந் தேதி வாரிசு படம் சன் நெக்ஸ்ட் ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
அமீர் பாவனி திருமணம் எப்போது?
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அமீர் – பாவனி ஜோடி சமீபத்தில் வெளியான அஜித்தின் துணிவு படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். அதோடு மட்டுமல்லாமல் டிவி ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்தபோதே இவர்களின் காதலுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், தற்போது இவர்கள் திருமணம் எப்போது என்று கேட்டு வருகின்றனர். இதனிடையே இன்று காதலர் தினத்தை முன்னிட்டு அமீர்- பாவனி இருவரும் தங்கள் திருமணம் செய்துகொள்வது உறுதி. ஆனால் ஒரு வருடம் கழித்துதான். எங்கள் துறையில் சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லியோ படத்தில் இணைந்த அஜித் பட நடிகை
வாரிசு படத்திற்கு பிறகு விஜய் நடித்து வரும் படம் லியோ. மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய் – லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ள இந்த படத்தில் த்ரிஷா சஞ்சய் தத், அர்ஜூன், மிஷ்கின், மன்சூர் அலி கான், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கஷ்மீரில் நடைபெற்று வரும் நிலையில், பிக்பாஸ் பிரபலம் அபிராமி தற்போது லியோ படத்தில் இணைந்துள்ளார். 2019-ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் அபிராமி நடித்திருந்தார்.
அட்லி மீது கடும் கோபத்தில் ஷாருக்கான்
தெறி, மெர்சல் பிகில் என விஜய் நடிப்பில் 3 தொடர் வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் அட்லி தற்போது ஷாருக்கான் நடிப்பில் ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில். படத்தின் இயக்குனர் அட்லி மீது நாயகன் ஷாருக்கான் கடும் கோபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு நிர்ணையித்த பட்ஜெட்டை விட அதிகமாக செலவு ஆகிவிட்டது தான் ஷாருக்கானின் கோபம் என்று கூறப்படுகிறது.
பொன்னியின் செல்வன் 2 முக்கிய அறிவிப்பு
கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் மூதல் பாகம் பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், ரூ 500 கோடிக்கு மேல் வசூலித்து புதிய சாதனை படைத்தது. இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் 2-ம் பாகம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், வரும் மார்ச் 28-ந் தேதி பொன்னியின் செல்வன் 2ம் பாகத்தின் டிரெய்லர் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில் டிரெய்லர் வெளியீட்டுக்காக ஒரு பிரம்மாண்ட விழா நடத்த பரிசீலனை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil