New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/07/Ponniyin-Selvan-1.jpg)
Tamil news updates
Tamil news updates
ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான தமிழ் சினிமாவில் வரலாற்று காவியம் பொன்னியின் செல்வன் படம் 3 நாட்களில் ரூ 200 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
1000 வருடங்களுக்கு முன்பு சோழ சாம்ராஜ்யத்தில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து எழுத்தாளர் கல்கி எழுத்திய பொன்னியின் செல்வன் நாவல் இன்றளவும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 1950-களில் வெளியான இந்த நாவலை திரைப்படமாக மாற்ற எம்.ஜி.ஆர் முதல் பாரதிராஜா கமல்ஹாசன் வரை பலரும் முயன்று தோல்வியை சந்தித்தனர்.
இதில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக உருவாக்கி வெற்றி கண்டுள்ளார். 2 பாகங்களா தயாராகியுள்ள இந்த படத்தின் மதல் பாகம் கடந்த செப்டம்பர் 30-ந் தேதி வெளியானது. பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், வசூலிலும், விமர்சனரீதியாகவும் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யாராய் பச்சன், சரத்குமார், பார்த்திபன், ஜெயராம், பிரகாஷ்ராஜ், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனத்துடன் இணைந்து மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்ய தோட்டா தரணி கலைப்பணிகளை செய்துள்ளார்.
Marching on and making history!
We extend our heartfelt gratitude to all the audience who've been showering us with love ❤️ ✨
Catch #PS1 in theatres near you!#PonniyinSelvan1 #ManiRatnam @arrahman @MadrasTalkies_ @LycaProductions @tipsofficial @tipsmusicsouth pic.twitter.com/3Fs21IX5k4— Lyca Productions (@LycaProductions) October 3, 2022
மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படம் முதல் நாளில் ரூ80 கோடி வசூலித்துள்ளதாக மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. இதுவே தமிழ் திரையுலகில் ஒரு படத்திற்கு கிடைத்த அதிகபட்ச முதல்நாள் வசூல் என்று விளம்பரம் செய்யப்பட்ட நிலையில், தற்போது பொன்னியின் செல்வன் படம் 3 நாட்களில் ரூ 200 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த அறிவிப்பை பார்த்த ரசிகர்கள் படத்தை கொண்டாடி வரும் நிலையில், இதற்கு முன்பு அதிகம் வசூல் செய்த படங்களின் சாதனையை முறியடிக்க வேண்டும் என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.