மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் 2 படம் 4-வது நாளில் 24 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இயக்குனர் மணிரத்னம் இயக்கிய படம் பொன்னியின் செல்வன். 2 பாகங்களாக தயாரான இந்த படத்தில் விக்ரம், த்ரிஷா, கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், பிரபு, பிரகாஷ்ராஜ், லால், உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். லைகா நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் உலகளவில் 500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இதன் காரணமான 2-ம் பாகத்தில் அதிக எதிர்பார்ப்பு நிலவியதை தொடர்ந்து கடந்த ஏப்ரல் 28-ந் தேதி பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் வெளியானது. முதல் பாகத்தை போல் 2-ம் பாகத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
பொன்னியின் செல்வன் 2 படம் திரையரங்குகளில் முதல் மூன்று நாட்களில் ரூ 80 கோடி வசூலித்துள்ளது. அதேபோல் முக்கிய சோதனையான திங்கள் கிழமையும் (நேற்று மே 1) படம் நல்ல வசூலை ஈட்டி வெற்றி பெற்றுள்ளது, இதன் மூலம் பொன்னியின் செல்வன் 2 4-வது நாளில் ரூ 24 கோடி என இரட்டை இலக்கத்தில் வசூல் செய்துள்ளது என இண்டஸ்ட்ரி டிராக்கர் சாக்னில்க் தெரிவித்துள்ளார். இதன் மூலம், படத்தின் மொத்த உள்நாட்டு வசூல் தற்போது ரூ100 கோடியை கடந்து ரூ 105.02 கோடியாக உயர்ந்துள்ளது.
நாட்டின் தமிழ் பேசும் வட்டாரத்தில் பொன்னியின் செல்வன் 2 நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நேற்று 58.04% முன்பதிவு செய்யப்பட்டது. இந்தி பேசும் பெல்ட்டில், படத்தின் முன்பதிவு 14.21% ஆக பதிவாகியுள்ளது. 34.39% மலையாளம் மற்றும் 25.66% தெலுங்கு முன்பதிவுகளை பெற்றது.
திரைப்பட வர்த்தக ஆய்வாளர் மனோபாலா விஜயபாலன், இந்த திரைப்படம் இரண்டு மிகப்பெரிய தமிழ் வெற்றிகளான பீஸ்ட் மற்றும் வாரிசு ஆகியவற்றின் மொத்த வசூலை கடக்கும் என்று தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதில் “இன்று பொன்னியின் செல்வன் பாகம் 2, வாழ்நாள் முழுவதும் பீஸ்ட்[153.64 கோடி] & வாரிசு[195.20 கோடி] வசூலைக் கடக்கும் என பதிவிட்டுள்ளார்.
கடுமையான விமர்சனங்கள் மற்றும் போட்டிக்கு எதுவும் படங்கள் இல்லாததால், பொன்னியின் செல்வன் 2 வரும் நாட்களில் மேலும் அதிகமாக வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“