Advertisment

சிறுவயது தேவதை : பொன்னியின் செல்வன் நடிகையா இவர்? வைரல் போட்டோஸ்

2016-ம் ஆண்டு இந்தியில் வெளியான ராமன் ராகவ் என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர், அடுத்து, செஃப், காலக்காண்டி, உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

author-image
WebDesk
New Update
Sobhita Dhulipala

பொன்னியின் செல்வன் நடிகை

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பயணத்தை தொடங்கிய நடிகை ஒருவரின் சிறுவயது புகைப்படம் இணயைத்தில் வைரலாகி வருகிறது. இவர் யார் என்று உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா?

Advertisment

சினிமா மற்றும் சின்னத்திரை ரசிகர்கள் தங்களின் விருப்பமான ஹீரோ ஹீாரோயின் ஆகியோரின் விபரங்களை தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். இவர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில், நடிகர் நடிகைகளின் சிறுவயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தும்.

அதேபோல் தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகை ஒருவரின் சிறுவயது புகைப்படத்தை வெளியிட்டு இவரை யார்னு கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் என்று கூறி வருகிறார்கள். இந்த நட்சத்திரம் யார் என்று உங்களுக்கு தெரிகிறதா? 

2016-ம் ஆண்டு இந்தியில் வெளியான ராமன் ராகவ் என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர், அடுத்து, செஃப், காலக்காண்டி, உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். 2018-ம் ஆண்டு கோடாச்சாரி என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமான, இந்த நடிகை, அடுத்து மூத்தான் என்ற படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார். மலையாளத்தில் குருப் படத்தில் நடித்திருந்த இவர், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அந்த நடிகை வேறு யாரும் இல்லை, பொன்னியின் செல்வன் படத்தில், வானதி கேரக்டரில் நடித்த நடிகை சோபிதா துலிபாலா தான். தற்போது மன்கிமேன் என்ற ஆங்கிலப்படத்தில் நடித்துள்ளார். ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட இவர், மும்பையில் வளர்ந்தவர். சட்டம், பொருளாதாரத்தில் பட்டம் பெற்றுள்ள சோபிதா, பரதநாட்டியம், குச்சிப்புடி நடனம் பயின்றவர். சினிமாவில் நடிக்கும் முன்பு மாடலிங்கில் பல பட்டங்களை வென்றவர்.

சமந்தாவுடன் விவாகரத்து பெற்ற நடிகர் நாக சைதன்யா, சோபிதா இவரும் டேட்டிங்கில் இருப்பதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியானது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment