கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் 2-ம் பாகம் நாளை வெளியாக உள்ள நிலையில், சொந்த மாநிலத்தில் சிறப்பு காட்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக மணிரத்னம் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் பொன்னியின் செல்வன். கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மாபன் இசையமைத்துள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
2 பாகங்களாக தயாரான பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் நாளை வெளியாக உள்ளது. மேலும் ‘பொன்னியின் செல்வன் 2’ சாதனை எண்ணிக்கையிலான திரைகளில் வெளியாக உள்ளது.
ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகும் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு தமிழகத்தில் சிறப்பு காட்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த படம் நாளை (ஏப்ரல் 28) காலை 9 மணிக்கு தமிழகத்தில் திறக்கப்பட உள்ளது. வேலை நாள் வெளியீடுகளின் அதிகாலை காட்சிகளை ரசித்துக்கொண்டிருக்கும் ரசிகர்கள், சரித்திர படம் சிறப்பு காட்சி இல்லாததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதனால் பொன்னியின் செல்வன் 2 முதல்நாள் வசூல் பாதிகக்ப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளத,
ஆனாலும் ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் முதல் காட்சி அமெரிக்காவில் ஏப்ரல் 28 ஆம் தேதி அதிகாலை 1:30 மணிக்கு இந்திய அளவில் திரையிடப்பட உள்ளது. மேலும், கேரளா மற்றும் கர்நாடகாவில் படத்திற்கு காலை 5 மற்றும் காலை 6 மணி சிறப்பு காட்சிகள் திட்டமிடப்பட்டுள்ளது, ஆனால் தமிழக வரலாற்றை அடிப்படையாக கொண்ட பொன்னியின் செல்வன் படத்திற்கு தமிழகத்தில் சிறப்பு காலைக் காட்சிக்கு அனுமதி இல்லாதது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
‘பொன்னியின் செல்வன் 2’ தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என்றும், இப்படம் உலகம் முழுவதும் 3200 திரையரங்குகளில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil