பி.எஸ்.2 இசை வெளியீடு: ரசிகர்கள் கொண்டாட்டம்

முதல் பாகத்தில் பொன்னி நதி பாடல்போல் 2-ம் பாகத்தில் அகநக பாடல் பெரிய வெற்றிப்பாடலாக அமைந்துள்ளது.

Ponniyin Selvan 2
பொன்னியின் செல்வன் பாகம் 2

மணிரத்னம் இயக்கத்தில் தயராகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் 2-ம் பாகம் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா தொடங்கியுள்ள நிலையில், படத்தின் டிரெய்லர் குறித்து பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக மணிரத்னம் இயக்கத்தில் தயராகியுள்ள படம் பொன்னியின் செல்வன். கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி 2-பாகங்களாக எடுக்கப்பட்ட இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பார்த்தீபன், ரஹ்மான், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். முதல்பாகத்தின் இறுதியில் பொன்னியின் செல்வன் (ஜெயம்ரவி) வந்தியதேவன் (கார்த்தி) இருவரும் பாண்டிய படைகளுடன் போரிட்டு இறுதியாக கடலில் விழுந்துவிடுவது போல் முடிந்தது.

இதனால் அவர்களுக்கு என்ன நடந்து, அவர்களை காப்பாற்ற கடலுக்குள் செல்லும் ஊமை ராணி யார் என்பது குறித்த காட்சிகள் 2-ம் பாகத்தில் இடம்பெற்றுள்ளதால், பொன்னியின் செல்வன் படத்தின் 2-ம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏற்கனவே முதல் பாகத்தில் பொன்னி நதி பாடல்போல் 2-ம் பாகத்தில் அகநக பாடல் பெரிய வெற்றிப்பாடலாக அமைந்துள்ளது.

இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் 2-ம் பாகம் வரும் ஏப்ரல் 28-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியிடும் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெறுகிறது. சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் பங்கேற்றுள்ள இந்நிகழ்ச்சியில் படத்தில் நடித்துள்ள அனைத்து நட்சத்திரங்களும் பங்கேற்றுள்ளனர். தற்போது நிகழ்ச்சி தொடங்கியுள்ள நிலையில், இரவு 9.30 மணிக்கு டிரெய்லர் வெளியாக உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema ponniyin selvan trailer and audio release function update

Exit mobile version