Advertisment

முன்னணி இசையமைப்பாளரின் இளம் வயது போட்டோ; அடையாளமே தெரியவில்லை - நெட்டிசன்கள் ஆச்சரியம்

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் இசையமைப்பாளரின் இளம் வயது போட்டோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
sana

இந்த புகைபடத்தைப் பார்த்த நெட்டிசன்கள் அவரா இவர் அடையாளமே தெரியவில்லையே என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் இசையமைப்பாளரின் இளம் வயது போட்டோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைபடத்தைப் பார்த்த நெட்டிசன்கள் அவரா இவர் அடையாளமே தெரியவில்லையே என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Advertisment

மரகத நாணயம், கனா, சித்தா போன்ற பல படங்களுக்கு இசையமைத்தவர் திபு நினான் தாமஸ். இவர் இளம் வயதில் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாராக வலம் வரும் சந்தோஷ் நாராயணன் உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படத்தில் சந்தோஷ் நாராயணன் யார் என்று கண்டுபிடிக்க பலரும் குழப்பம் அடைந்து இறுதியில், கண்டுபிடிக்கும்பொது, அவரா இவர், அடையாளமே தெரியவில்லை என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

sana

அண்மையில், சித்தா படத்துக்கு இசையமைத்ததற்காக ஃபிலிம் ஃபேர் விருது வாங்கிய இசையமைப்பாளர் திபு நினான் தாமஸ் சந்தோஷ் நாராயணனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

 

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பற்றி கருத்து தெரிவித்துள்ள, திபு நினான் தாமஸ், “என் வழிகாட்டி சந்தோஷ் நாராயணனுக்கு பெரிய நன்றி. அவர் எனது பயணத்தில் பெரிய இன்ஸ்பிரேஷன் ஆக இருந்திருக்கிறார். இசையமைப்பில் இருக்கும் அடிப்படை விஷயங்களை சொல்லி கொடுத்தது மட்டுமின்றி, அதில் இருக்கும் நுணுக்கங்களையும் சொல்லி கொடுத்தார். அவரது வழிகாட்டுதல் எனக்கு மதிப்புமிக்கது” என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.

sana

உண்மையில், இந்த புகைப்படத்தில் உள்ள இருவரில் யார் சந்தோஷ் நாராயணன் என்று கண்டுபிடிப்பதில் சில நொடிகள் குழப்பம் ஏற்படவே செய்கிறது. ஒருவழியாக சந்தோஷ் நாராயணனை அடையாளம் காணும்போது வியக்காமல் இருக்க முடியவில்லை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

Santhosh Narayanan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment