ஆதிபுருஷ் ஆட்சியா? வீழ்ச்சியா?... ட்விட்டர் விமர்சனம்

ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள ஆதிபுருஷ் திரைப்படம் 5 மொழிகளில் வெளியாகியுள்ளது.

ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள ஆதிபுருஷ் திரைப்படம் 5 மொழிகளில் வெளியாகியுள்ளது.

author-image
WebDesk
New Update
Adipurush

ஆதிபுருஷ் படம்

நடிகர் பிரபாஸ் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள ஆதிபுருஷ் திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓம் ராவத் இயக்கியுள்ள இந்த படத்தில் கீர்த்தி சனோன், சையப் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில், தமிழ் தெலுங்கு, மலையாளம் கன்னடம் இந்திய உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியுள்ளது.

Advertisment

ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு இந்திய அளவில் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாகுபலி படத்திற்கு பிறகு ஒரு பெரிய வெற்றியை எதிர்நோக்கி காத்திருக்கும் நடிகர் பிரபாஸ்க்கு முக்கிய படமாக பார்க்கப்பட்டது.

Advertisment
Advertisements

மேலும் இந்த படம் வெளியாகும் அனைத்து தியேட்டர்களிலும், கடவுள் அனுமனுக்காக ஒரு சீட் ஒதுக்க வேண்டும் என்று இயக்குனர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் ஆதரவற்றோர் இல்லம், மற்றும் குழந்தைகளுக்காக ஆயிரக்கணக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருந்தனர்.

இப்படி பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ஆதிபுருஷ் திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், படம் குறித்து ட்விட்டரில் வெளியாகியுள்ள விமர்சனங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

நடிகர் பிரபாஸ் நடிப்பில் இன்று தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகியிருக்கும் ஆதிபுருஷ் படம் குறித்து ட்விட்டரில் பலர் கலவையான விமர்சனங்களை தெரிவித்துள்ளனர்.

ராமாயண கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து ஓம் ராவத் இயக்கியுள்ள திரைப்படம் 'ஆதிபுருஷ்' . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சைப் அலி கான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். 2டி மற்றும் 3டி தொழில்நுட்பங்களில் இந்தியா முழுவதும் இந்தப் படம் இன்று வெளியாகியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Prabhas

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: