/indian-express-tamil/media/media_files/sXLhE0VJ5mmPCPcMylaX.jpg)
பிரபுதேவா - கஜோல்
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று அழைக்கப்படும் நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவா, 27 வருடங்களுக்கு பிறகு நடிகை கஜோலுடன் இணைந்துள்ளார்.
.இந்திய சினிமாவில் நடன கலைஞராக அறிமுகமாகி, நடிகர், இயக்குனர் என பன்முக திறமையை வளர்த்தக்கொண்டு முன்னணி நட்சத்திரமாக இருக்கும் பிரபுதேவா, தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் கடந்த 1997-ம் ஆண்டு ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளியான மின்சார கனவு திரைப்படத்தில் நாயகனாக நடித்திருந்தார்.
அரவிந்த் சாமி, கஜோல் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த படத்தில், மானா மதுரை, வென்னிலவே உள்ளிட்ட அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இந்தியன் மைக்கேல் ஜாக்சன் என்று வர்ணிக்கப்படும், பிரபுதேவாவின் நடன அசைவுகள் பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்தது. இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், அதன்பிறகு கஜோல் – பிரபுதேவா ஜோடி இணையவில்லை.
இதனிடையே 27 ஆண்டுகளுக்கு பிறகு, கஜோல் மற்றும் பிரபுதேவா, ஜோடி மீண்டும் இணைந்து நடிக்கின்றனர். இயக்குனர் சரண்தேஜ் உப்பலபதியின் வரவிருக்கும் மஹாராக்னி படத்தில் இருவரும் இணைந்து நடிக்கின்றனர். மஹாராக்னியின் தயாரிப்பாளர்கள் இரண்டு நடிகர்களையும் மற்ற நடிகர்களையும் அறிமுகப்படுத்தும் வீடியோ காட்சி ஒன்றைய சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
So kicked to share this with u guys #Maharagni aka Queen of queens Take a moment and have fun hope u guys like it 🫶@tej_uppalapati@iamsamyuktha_@PDdancing@DVANISHREDDY@dop_gkvishnu@rameemusic@sahisuresh@navinnooli@jessicakhurana7@Eternal7_enterhttps://t.co/ZM8aJzgzXx
— Kajol (@itsKajolD) May 28, 2024
மஹாராக்னி படத்தில், நசிருதின் ஷா, சம்யுக்தா, ஜிஷு சென் குப்தா, ஆதித்ய சீல், சாயா கதம் மற்றும் பிரமோத் பதக் ஆகியோரும் நடித்துள்ளனர். உணர்ச்சிகள் மற்றும் மனதைக் கவரும் ஆக்ஷன் காட்சிகளின் வெடிக்கும் காக்டெய்ல்" என்று கூறப்படும் இத்திரைப்படத்தை பவேஜா ஸ்டுடியோஸ் மற்றும் இ7 என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்தின் கீழ், ஹர்மன் பவேஜா மற்றும் வெங்கடா அனிஷ் டோரிகில்லு ஆகியோர் தயாரித்துள்ளனர்.
ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவாளராகவும், ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இசையமைப்பாளராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மஹாராக்னி படத்தின் முதல் ஷெட்யூல் முடிந்துவிட்டதாகவும், படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர்கள் விரைவில் அறிவிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.