Prabhu Deva and Tamanna Movies releases on same day - பிரபு தேவா - தமன்னா நடித்திருக்கும் 2 படங்களும் ஒரே நாளில் ரிலீஸ்! | Indian Express Tamil

பிரபு தேவா – தமன்னா நடித்திருக்கும் 2 படங்களும் ஒரே நாளில் ரிலீஸ்!

Prabhu Deva and Tamanna Movie: இந்தப் படம் வரும் மே 31-ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

பிரபு தேவா – தமன்னா நடித்திருக்கும் 2 படங்களும் ஒரே நாளில் ரிலீஸ்!

Prabhu Deva and Tamanna Movie: நடிகர் பிரபு தேவா, நடிகை தமன்னா நடிப்பில் கடந்த 2016-ம் வருடம் வெளியான தேவி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

ஹாரர் காமெடி படமான இதனை இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கியிருந்தார்.

தற்போது இதன் இரண்டாம் பாகமும் இயக்கப்பட்டுள்ளது. தேவி 2 என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இதில், பிரபு தேவா, தமன்னாவே முன்னணி ரோல்களில் நடிக்கிறார்கள்.

Prabhu Deva and Tamanna’s Devi 2

இவர்களுடன், சோனு சூத், கோவை சரளா, நந்திதா ஸ்வேதா ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்தப் படம் வரும் மே 31-ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Devi 2 - Prabhu Deva, Tamanna Bhatia

இந்நிலையில் உன்னைப் போல் ஒருவன், பில்லா 2 ஆகியப் படங்களை இயக்கிய சக்ரி டோலேட்டி இந்தியில் இயக்கியிருக்கும் படம் ‘கமோஷி’. இதில் பிரபுதேவா வில்லனாகவும், தமன்னா காது கேளாத வாய் பேசாத பெண்ணாகவும், பூமிகா சப்போர்ட்டிங் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

இந்தப் படமும் தேவி 2 ரிலீஸாகும் அதே மே 31-ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema prabhu deva tamanna devi