தொடர்ந்து வித்தியாசமான கதைகளில் நடித்து வரும் பிரபுதேவா, இளைஞர்களை கவருவதற்காகவே அவர் நடித்த "பஹிரா"படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியாகி உள்ளது.சைக்கோ திரில்லரான இப்படம் இளைஞர்களை கவர்ந்ததா?என்பதை கீழே பார்க்கலாம்.
கதை:
பல ஆண்களை காதலித்து ஏமாற்றும் பெண்களை குறி வைத்து கொலை செய்யும் சைக்கோ தான் பிரபுதேவா.அது மட்டுமல்லாமல் நான்கு பெண்களையும் காதலித்து, அவர்களையும் கொலை செய்ய திட்டமிடுகிறார். ஏன் இவ்வாறு அவர் செய்கிறார்? என்பதை சொல்லும் படமே "பஹிரா".
பிரபுதேவா:
சமீப காலமாக தொடர்ந்து வித்தியாசமான படங்களில் நடித்து வருகிறார் பிரபுதேவா. இவர் நடிப்பில் வெளிவந்த மை டியர் பூதம் குழந்தைகளிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது தற்போது டீன் ஏஜ் ஆடியன்ஸை குறி வைத்து அவர் இப்படத்தில் நடித்திருக்கிறார். படத்தில் பெண்களைக் கொல்வதற்காக பல கெட்டப்புகளில் வந்து நம்மை ஆச்சரியப்படுத்துகிறார். ஒரு சைக்கோவிற்கே உண்டான அனைத்து பாவங்களையும் தன்னுடைய உடல் மொழியின் மூலம் காண்பித்து நம்மை மிரட்டுகிறார். இதுவரை நாம் பார்த்திடாத புதிய பரிமாணத்தில் அவர் செய்யும் காமெடிகளும், கொலைகளும் நம்மை ரசிக்க வைக்கிறது. ஒரு நடிகராக தன்னுடைய வேலையை 100% சிறப்பாக செய்திருக்கிறார்.
7 நாயகிகள்:
இப்படத்தில் சாக்ஷி அகர்வால், யாஷிகா ஆனந்த், ஜனனி, அமைரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், காயத்ரி, சஞ்சிதா ஷெட்டி என மொத்தம் 7 ஹீரோயின்கள் நடித்துள்ளனர். அனைவருக்கும் பெரியளவில் நடிக்க வாய்ப்பில்லை என்றாலும் தாங்கள் வரும் குறிப்பிட்ட நேரத்தில் தங்களுடைய பங்களிப்பை சிறப்பாக அளித்துள்ளனர்.
இயக்கம் மற்றும் இசை:
"திரிஷா இல்லனா நயன்தாரா" படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் "ஆதிக் ரவிச்சந்திரன்".இவர் தொடர்ந்து இளைஞர்களை மகிழ்ச்சி படுத்தும் விதமாக "ஏ" படங்களையே இயக்கி வந்திருக்கிறார். இப்படமும் அதேபோல ஜானரில் தான் இருக்கிறது. பின்னணி இசை படத்திற்கு தேவையான அளவு இருந்தாலும் ஆங்காங்கே ஓவராக வரும் மியூசிக் நம்மை எரிச்சலூட்டுகிறது. மேலும் இப்படத்தின் பாடல்கள்,கதைக்கு சம்பந்தமே இல்லாமல் இருப்பதால் ரசிக்க இயலவில்லை.
பாசிட்டிவ்ஸ்:
*பல கெட்டப்புகளில் கலக்கியிருக்கிறார் பிரபுதேவா.
*இளைஞர்களுக்கு பிடித்தமான பல விஷயங்களை சேர்த்திருப்பது சிறப்பு.
*படத்தின் வசனங்கள் ஈர்ப்பை பெறுகின்றன.
*காமெடி காட்சிகள் ஓரளவிற்கு ஒர்க் அவுட்டாகி இருக்கிறது.
நெகட்டிவ்ஸ்:
*திரைக்கதை இன்னும் சுவாரஸ்யமாக அமைந்திருக்கலாம்.
*படத்தின் இரண்டாம் பாதியின் சில காட்சிகளை தவிர்த்திருக்கலாம்.
*அனைத்து பாடல்களையும் தவிர்த்திருக்கலாம்.
*பிரபுதேவா செய்யும் கொலைகளுக்கான காரணங்கள் இன்னும் அழுத்தமாக இருந்திருந்தால், சிறப்பாக இருந்திருக்கும்.
மொத்தத்தில் ஒரு சுமார் படமாக இருந்தாலும், நண்பர்களுடன் சென்று ஜாலியாக என்ஜாய் செய்யும் அளவில் உள்ளது.
*Overall - An Average flim with lots of adult content
*Marks - (2.5/5)
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil