யுவன், சச்சின் குறித்து அவதூறு பதிவு... லவ் டுடே இயக்குனருக்கு வலுக்கும் எதிர்ப்பு

கடந்த 2019-ம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன். கடந்த வாரம் வெளியான லவ் டுடே படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமாகியுள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன். கடந்த வாரம் வெளியான லவ் டுடே படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமாகியுள்ளார்.

author-image
WebDesk
New Update
யுவன், சச்சின் குறித்து அவதூறு பதிவு... லவ் டுடே இயக்குனருக்கு வலுக்கும் எதிர்ப்பு

லவ் டுடே படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, கிரிக்கெட் வீரர் தோனி மற்றும் சச்சின் டெண்டுல்கர் குறித்து அவதூறாக பதிவிட்டதாக கூறப்படும் பழைய பேஸ்புக் பதிவுகள் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

Advertisment

கடந்த 2019-ம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன். கடந்த வாரம் வெளியான லவ் டுடே படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமாகியுள்ளார். இன்றைய இளைஞர்கள் இணையத்தளத்தை பயன்படுத்தும் விதம் அவர்களுக்குள் இருக்கும் காதல் என்பதை அடிப்படையாக வைத்து திரைப்பதை அமைக்கப்பட்டுள்ள இந்த படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது.

சிறிய பட்ஜெட்டில் தயாரான லவ் டுடே படம், தற்போது பெரிய வசூல் செய்து வரும் நிலையில், படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிட உள்ளனர். இதன் மூலம் தமிழ் சினிமாவில் தற்போது ஹாட் டாப்பிக்காக மாறியுள்ள பிரதீப் ரங்கநாதன், சில வருடங்களுக்கு முன்பு, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, மகேந்திர சிங் தோனி மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகிய பிரபலங்களை விமர்சிக்கும் வகையில் வெளியிட்டுள்ள பதிவு அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பதிவுகளில்,"யுவன் சங்கர் ராஜா வேஸ்ட், மோசடி என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வெளியாகி வசூல் சாதனை படைத்து வரும் லவ் டுடே படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா தான் இசையமைத்துள்ளார். மேலும், பிரதீப் சமீபத்திய பேட்டிகளில் யுவன் குறித்து பாராட்டுக்களை தெரிவித்திருந்தார். மற்றொரு பதிவில், சச்சின் டெண்டுல்கரை சுயநலவாதி என்று கடுமையான வார்த்தைகளால் அவரை விமர்சித்திருந்தார்.

Advertisment
Advertisements

இந்த பதிவுகள் இணையத்தில் தற்போது அதிகமாக பகிரப்பட்டு வரும் நிலையில். இயக்குனர் பிரதீப் ரங்கநாதனுக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.  இதனிடையே இந்த பதிவுகள் குறித்து விளக்கம் அளித்துள்ள பிரதீப் ரங்கநாதன்,  இந்த பதிவுகள் அனைத்தும் போட்டோஷாப் செய்யப்பட்டதாகக் கூறியுள்ளார். மேலும் தனது பேஸ்புக் கணக்கை டிஆக்டீவேட் செய்துவிட்ட பிரதீப் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் இந்த விமர்சனங்களுக்கு விளக்கம் அளித்து ஒரு பதிவை வௌயிட்டுள்ளார்.

இந்த பதிவில், இணையத்தில் வைரலாகி வரும் வரும் பல பதிவுகள் போட்டோஷாப் செய்யப்பட்டவை. ஒரு வார்த்தையை மாற்றினால் கூட பல விஷயங்கள் மாறும் என்பதால் முகநூல் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இதில் விஷயங்களை மாற்ற முயற்சிப்பவர்கள் மீது எனக்கு கோபம் இல்லை, அதற்குப் பதிலாக மக்கள் என்னை எவ்வளவு ஆதரிக்கிறார்கள் என்பதை எனக்குக் காட்டியதற்காக அவர்களுக்கு நன்றி கூறுகிறேன் என்று கூறியுள்ளார்..

மேலும் சில பதிவுகள் உண்மையானவை. ஆனால் கசப்பான வார்த்தைகள் கொண்ட பதிவுகள் போலியானவை. நான் தவறு செய்துவிட்டேன், வயதுக்கு ஏற்ப நாம் அனைவரும் வளர்ந்து கற்றுக்கொள்கிறோம், அதை சரிசெய்ய முயற்சித்தேன். நான் இன்னும் ஒவ்வொரு நாளும் ஒரு சிறந்த மனிதனாக மாற முயற்சிக்கிறேன். ஆனால் புகழுடன் சர்ச்சைகளும் வரும் என்று கூறியுள்ளார்.

குறுகிய காலத்தில் பிரபலமான இயக்குனராக வந்துள்ள பிரதீப் இந்த  சர்ச்சைகளை சமாளித்தாலும், இளைஞர்களை கவர்ந்த அவரின் லவ் டுடே படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. காதலர்கள் இருவரும் தங்களது போனை மாற்றிக்கொண்டால் என்ன நடக்கும் என்பதை காமெடியாக சொல்லியிருக்கும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தகக்து.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: