அந்தகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் டாப் ஸ்டாராக மாறியுள்ள நடிகர் பிரஷாந்த்க்கு எப்போது திருமணம் என்ற கேள்விக்கு அவரது அப்பாவும் இயக்குனருமான தியாகராஜன் சரியாக பதில் கொடுத்துள்ளார்.
90-களில் வெளியான வைகாசி பொறந்தாச்சு என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான பிரஷாந்த், முதல் படமே பெரிய வெற்றிகை கொடுத்தால், அடுத்தடுத்து படங்களில் நடித்து அந்த வெற்றியை தக்கவைத்துக்கொண்டார். இவரது நடிப்பில், வெளியான திருடா திருடா, ஜீன்ஸ், வின்னர், தமிழ், உள்ளிட்ட பல படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தது. விஜய் அஜித்துக்கு முன்னதாக தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்தவர் தான் பிரஷாந்த்.
சினிமாவில் டாப் ஸ்டாராக இருந்தாலும், அவரது திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை. கடந்த 2005-ம் ஆண்டு கிரகலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்ட பிரஷாந்த் அந்த வாழ்க்கை சரியாக அமையாததால், கடந்த 2009-ம் ஆண்டு மனைவியை பிரிந்தார். இதன் பிறகு அவர் நடித்த படங்கள் தொடர் தோல்வியை சந்தித்த நிலையில், பிரஷாந்த்க்கு தமிழ் சினிமாவில் வரவேற்பு குறைந்தது. இதன் காரணமாக தெலுங்கில், வினய விதய ராமா என்ற படத்தில் கேரக்டர் நடிகராக நடித்தார்.
அந்த படமும் தெலுங்கில் வெற்றியை கொடுக்காத நிலையில், இந்தியில் வெளியாள அந்தாதூன் என்ற படத்தை தமிழில் ரீமேக் செய்து நடித்தார். சிம்ரன், பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி, கார்த்திக், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயரான இந்த படம் கடந்த சில ஆண்டுகளாக வெளியாகாமல் இருந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 9-ந் தேதி வெளியிடப்பட்டது. இந்த படத்தின் மூலம் பிரஷாந்த் கம்பேக் கொடுப்பாரா என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அந்தகன் படம் கவனம் ஈர்த்தது.
முதல் நாளில் ரசிகர்கள் மத்தியில் வெளியான பாசிட்டீவ் விமர்சனங்கள் காரணமாக அந்தகன் படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்து, பிரஷாந்த்க்கு சரியான ரீ-என்ட்ரி படமாக அமைந்துள்ளது. இந்த படத்தின் வெற்றிவிழா என்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய, இயக்குனரும் நடிகருமான கே.எஸ்.ரவிக்குமார், பிராஷாந்துக்கு எப்போது திருமணம் என்று வெளிப்படையாக கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த தியாகராஜன், அந்தகன் படம் வெற்றிகரமாக வெளியாகி வெற்றியை கொடுத்துள்ளது.
அடுத்த பட வேலைகளை தொடங்கும்முன் பிரஷாந்துக்கு திருமணம் செய்வது தான் முதல் வேலை என்று கூறியுள்ளார். அப்பா தியாகராஜன் தனது திருமணம் குறித்து பேசியதால் வெட்கப்பட்ட நடிகர் பிரஷாந்த் அந்தகன் பட நாயகி பிரியா ஆனந்த் பின்னால் ஒளிந்துகொள்வது போன்ற வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“