Advertisment

ஏழைகளின் வெளிநாட்டு வாழ்க்கையை சொல்கிறதா? ஆடுஜீவிதம் விமர்சனம்

பிரித்விராஜ் அமலாபால் நடிப்பில் வெளியாகியுள்ள ஆடுஜீவிதம் படம் எப்படி உள்ளது?

author-image
WebDesk
New Update
Aadujeevitham

ஆடுஜீவிதம்

பிருத்விராஜ், அமலா பால் ஆகியோர் நடிப்பில் இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி இருக்கும் "ஆடு ஜீவிதம்" படத்தின் விமர்சனம்.

Advertisment

கதைக்களம் :

வறுமை காரணமாக தன் மனைவிக்காகவும் அவள் வயிற்றில் வளரும் தன் குழந்தைக்காகவும், நண்பர் ஒருவரின் உதவியோடு அரபு நாட்டுக்கு உதவியாளர் பணிக்கு பயணப்படுகிறார் நாயகன் நஜீப் முகமது (பிரித்விராஜ்). ஆனால் எதிர்பாராத விதமாக வாழ்க்கை முழுவதும் அடிமைப்படுத்தி வாழ வைக்கும், ஆடு மேய்க்கும் கும்பலிடம் மாட்டிக்கொள்ளும் சூழ்நிலை உருவாகிறது. இரக்கமே இல்லாத கும்பலால் பாலைவனத்தில் பல கொடுமைகளையும், சித்திரவதைகளையும் அனுபவிக்கும் பிரித்திவிராஜ் அதிலிருந்து எப்படி மீண்டு வந்தார் என்பதை உணர்வு பூர்வமாக சொல்லி இருக்கும் படமே ஆடு ஜீவிதம் (The Goat Life)

நடிகர்களின் நடிப்பு

நஜீப் முகமது கதாபாத்திரத்தில் பிரித்திவிராஜ் நடித்தார் என்பதைவிட வாழ்ந்தார் என சொல்வது தான் பொருத்தமாக இருக்கும். அந்த அளவிற்கு கதாபாத்திரத்துடன் ஒன்றி இப்படத்திற்கு தன் நடிப்பால் உயிர் கொடுத்திருக்கிறார். பால் கறக்கத் தெரியவில்லை என அடி வாங்கும் காட்சி, தப்பிக்க நினைக்கும் போது சித்திரவதைக்கு உள்ளாகும் காட்சி ஆகியவை கண்களை குளமாக்கி விடுகின்றன. தனிமை, தாகம், பசி, வெயில்  காதல் என அனைத்து சூழ்நிலைகளிலும் எதார்த்த நடிப்பால் கைத்தட்டல்களை பெறுகிறார். சிறு கதாபாத்திரம் என்றாலும் தனக்கான பங்கை சிறப்பாக வழங்கி இருக்கிறார் சைனு (அமலா பால்).

இயக்கம் மற்றும் இசை

உண்மைச் சம்பவங்களின் அடிப்படையாக கொண்டு எழுத்தாளர் பென்யாமின் எழுதிய "ஆடு ஜீவிதம்' நாவலை அடிப்படையாக வைத்து சுமார் 16 ஆண்டுகள் கடுமையாக உழைத்து இந்த உணர்வுபூர்வமான படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் பிளெஸ்ஸி. படத்தின் மற்றொரு மிகப்பெரிய தூண் இசை புயலின் இசை. திரைக்கதையின் ஆழத்தை பிரித்விராஜ் எவ்வளவு தூரம் நமக்கு கடத்துகிறாரோ அதைவிட ஒரு படி மேலே இவரின் இசை நம்மை உணர்வுபூர்வமாக படத்தோடு கலக்க வைக்கிறது. அதே போல் ஒளிப்பதிவாளர் சுனிலின் ஒவ்வொரு காட்சியும் உலகத்தரம் என்று தான் சொல்ல வேண்டும்.

படத்தின் பிளஸ்

உணர்வுபூர்வமான கதைக்களம்

பிரித்திவிராஜின் எதார்த்த நடிப்பு

துணை நடிகர்களின் அட்டகாசமான நடிப்பு

இசைப்புயலின் உணர்வுபூர்வமான இசை

பிளஸ்ஸி இயக்கம்

உலகத்தரமான ஒளிப்பதிவு

படத்தின் மைனஸ்

மெதுவான பரபரப்பு இல்லாத காட்சிகள்

படத்தின் நீளம்

மொத்தத்தில் ஒவ்வொரு காட்சிகளிலும் ரசிகர்களை உயிர்ப்புடனும், வலியுடனும் படத்தோடு ஒன்ற வைத்து இறுதியில் ஒரு சிறந்த படத்தைப் பார்த்த மகிழ்ச்சியை கொடுக்கிறது "ஆடு ஜீவிதம்"

நவீன் சரவணன்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Prithvi Raj
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment