scorecardresearch

திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் : மீண்டும் தலைவராக தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி

தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தொடந்து 2-வது முறையாக தலைவர் பதவிக்கான தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

Murali
தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தொடர்ந்து 2-வது முறையாக தேர்வ செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல், சென்னை அடையாறு எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாய்குகள் இன்று எண்ணப்பட்டது. ஓய்வு பெற்ற நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் வெங்கட்ராமன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த வாக்கு எண்ணும் பணி காலை 9.30 மணிக்கு தொடங்கப்பட்டது.

இந்த வாக்கு எண்ணிக்கை முடிவில், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தன்னை எதிர்த்து போட்டியிட்ட டி.மன்னனைவிட 150 வாக்குகள் அதிகம் பெற்று தலைவர் பதவிக்கு தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். இந்த தேர்தலில் தயாரிப்பாளர்கள் நலன் காக்கும் கூட்டணி சார்பில் முரளி போட்டியிட்டார். ஏற்கனவே தலைவராக இருந்த தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தொடந்து 2-வது முறையாக தலைவர் பதவிக்கான தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

தயாரிப்பாளர் சந்க பொருளாளராக தேனாண்டாள் முரளி அணியின் சந்திரபிரகாஷ் ஜெயின் வெற்றி பெற்றுள்ளார். இந்த தேர்தலில், கமல்ஹாசன், ரஜினிகாந்த், ராதாராவி, பாக்யராஜ், ராமராஜன், எஸ்வி சேகர், ஆர்யா, சசிகுமார், டெல்லி கணேஷ், விஷ்னு விஷால் உள்ளிட்ட நடிகர்கள் பலர் வாக்களித்திருந்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema producer council election thenandal films murali won president postion

Best of Express