/indian-express-tamil/media/media_files/koPVvA0tgYAhxfoSo1Od.jpg)
சூர்யா - ஞானவேல் ராஜா
கங்குவா படம் ரிலீசுக்கு முன்பே ரூ100 கோடி வசூல் செய்துவிட்டதால், தமிழ் சினிமாவில் ரஜினிக்கு பிறகு சூர்யா தான் என்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, கடைசியாக பாண்டியராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு அவர் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை என்றாலும், கங்குவா என்ற பிரம்மாண்ட படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கி வரும் இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார்.
வரலாற்று பின்னணி கொண்ட படமாக தயாராகும் இந்த படத்தின் மூலம் பாலிவுட் நடிகை திஷா பதானி, பாபி தியோல் ஆகியோர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். 10 மொழிகளில் தயாராகி வரும் இந்த படம், 2024-ம் ஆண்டில் வெளியாக உள்ளது. மேலும் சூர்யா நடிப்பில் பெரிய பொருட்செலவில் தயாராகி வரும் முதல் படம் கங்குவா தான்.
இந்நிலையில், தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கும் கங்குவா படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. ரிலீசுக்கு முன்பே ரூ100 கோடி வசூலித்துள்ளதால், தமிழ் சினிமாவில், ரஜினிகாந்துக்கு பின் சூர்யா தான் என்று படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தமிழ் சினிமாவில் ரஜினிகாந்துக்கு பிறகு அதிக பிஸினஸ் செய்யக்கூடிய படம் என்றால் அது சூர்யா படம் தான். கங்குவா படம் ரிலீசுக்கு முன்பே ரூ100 கோடி பிஸினஸ் செய்துள்ளது என்று படத்தின் தயாரிப்பாளராக நான் சொல்கிறேன். நம்பர் ஒன் நடிகர் என்பது வாங்கும் சம்பளத்தை பொறுத்தது அல்ல, அந்த நடிகரின் படம் வசூல் செய்யும் தொகையை பொறுத்தது.
• Suriya Touched (100 CR) Pre Business in 2017 Itself Non - Rajini Record on that time 🔥#Kanguvapic.twitter.com/BKtKpelO8m
— ₮Ⱨ₳₦J₳ł ₳ⱤɄ₦ (@Arun_SFC_49TN) February 28, 2024
தயாரிப்பாளர் லாபம் பெறுவதற்கு எந்த நடிகர் காரணமோ அவர் தான் நம்பர் ஒன் நடிகர். ஊடகங்கள் பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம். படத்தின் வசூல் கூறித்த தகவலை சம்மந்தப்பட்டவர்களிடம் உறுதி செய்த பின்பே வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளார். சமீப காலமாக தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் – விஜய் போட்டி நடிகர்கள் என்று ரசிகர்கள் கூறி வந்த நிலையில், தற்போது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் பேச்சு, நேரடியாக விஜயை சீண்டும் வகையில் அமைந்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.