scorecardresearch

அன்பே சிவம், புதுப்பேட்டை படங்களின் தயாரிப்பாளர் கே.முரளிதரன் மரணம்

1994-ம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியான அரண்மனை காவலன் என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாவர் கே.முரளிதரன்.

அன்பே சிவம், புதுப்பேட்டை படங்களின் தயாரிப்பாளர் கே.முரளிதரன் மரணம்

கமல், விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்த தயாரிப்பாளர் கே.முரளிதரன் மாரடைப்பால் இன்று மரணமடைந்துள்ள நிகழ்வு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1994-ம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியான அரண்மனை காவலன் என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாவர் கே.முரளிதரன். தொடர்ந்து தனது லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் மூலம், மிஸ்டர் மெட்ராஸ், விஜயகாந்தின் தர்மசக்கரம், விஜய் நடிப்பில் பிரியமுடன், அஜித் நடிப்பில் உன்னைத் தேடி, கமலின் அன்பே சிவம், சிலபம்பாட்டம் புதுப்பேட்டை உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார்.

கடைசியாக ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான சகலகலாவல்லவன் என்ற படத்தை தயாரித்திருந்தார். இந்நிலையில், கும்பகோணத்தில் வசித்து வந்த கே. முரளிதரன் மரடைப்பு கரணமாக இன்று மரணமடைந்தார். அவருக்கு திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema producer k muralidharan passed away