தயாரிப்பாளர் கே.ராஜன் இசை வெளியீட்டு விழா ஒன்றில் பேசிக்கொண்டிருந்தபோது பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் என்டரி ஆகி பேசியபோது இருவருக்கு வார்த்தை மோதல் ஏற்பட்டது பெரும் வைரலாக பரவி வருகிறது.
தமிழ் சினிமாவில் கவுண்டமணி செந்தில் காமெடி காம்போவில் பல படங்களில் அவர்களுடன் இணைந்து நடித்துள்ளவர் பயில்வான் ரங்கநாதன். தற்போது தனியாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வரும் இவர், சினிமா விமர்சனம் செய்து வருகிறார்.. அதோடு மட்டுமல்லாமல் நடிகர் நடிகைள் குறித்து பலவிதமாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.
இவரின் கருத்துக்கு பலமான எதிர்ப்புகள் வந்தாலும் பயில்வான் அதை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து தனது கருத்துக்களை முன்வைத்து வருகிறார். இதற்கு பல சினிமா பிரபலங்களும் தங்களது பேட்டியில் இவருக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த வகையில் தயாரிப்பாளர் கே.ராஜன் தான் பேசும் மேடைகளில் எல்லாம் பயில்வான் ரங்கநாதன் குறித்து தனது விமர்சனத்தை முன்வைத்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது கட்சிக்காரன் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற கே.ராஜன் மேடையில் பேசினார். அப்போது அவருக்கு போர்த்தப்பட்ட சால்வையை காட்டி இது ராஜஸ்தானில் தயார் செய்யப்பட்டது. இது இங்கே போட்டதால் என்ன பயன். போகும்போது இங்கே வீசிவிட்டு சென்றுவிடுகிறோம். அதற்கு பதிலாக ஒரு கர்ச்சிப் கொடுத்தால் நன்றாக இருக்கும். அதுவும் திருப்பூரில் உள்ள நமது நெசவாளனர்கள் நெய்ததாக இருக்க வேண்டும் என்று பேசினார்.
அப்போது திடீரென பயில்வான் ரங்கநாதன் நிகழ்ச்சிக்கு வருகிறார். அவரை பார்த்த கே.ராஜன் வாங்க அண்ணே என்று சொல்லி பேச தொடங்க பயில்வான் ரங்கநாதன் கே.ராஜனை மரியாதை இல்லாமல் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி பேசியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்ப்ட்ட நிலையில், அருகில் இருந்தவர்கள் இவரையும்’ சமாதானம் செய்ய முயற்சித்தனர்.
ஒரு கட்டத்தில் மோதல் முற்றவே உங்களுக்கு பதில் சொல்ல நான் இங்கு வரவில்லை. உங்களுக்கு பதில் சொல்லும் இடம் வேறு. தனியாக வைத்தக்கொள்ளலாம். இந்த மேடை தயாரிப்பாளர் போட்டது. நமக்கு தனியாக மேடை வைத்து ரெண்டுபேரும் போட்டி வச்சிக்கலாம். எதும் ஓசிக்கு வேண்டாம். நீதான் ஒவ்வொரு தாய்மார்களையும், நடிகைகளையும் கேவலப்படுத்திக்கொண்டு இருக்க, எப்போ பார்த்தாலும் பெட்ரூம் பத்தியே பேசிட்டு இருக்க இந்த மிரட்டல் எல்லாம் வேற ஆள்ட வச்சிக்க என்று பேசியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து பயில்வான் ரங்கநாதன் அங்கிருந்து வெளியேறிவிட்ட நிலையில், கே.ராஜனுக்கு தண்ணீர் கொடக்கின்றனர். எனக்கு தண்’ணீர் வேண்டாம். அவனுக்கு தண்ணி காட்றதே நான்தான் என்று கூறுகிறார். இவர்களுக்கு இடையே நடந்த இந்த மோதல் சமூகவலைதளங்களில் பெரும் வைரலாக பரவி வருகிறது. தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளராக கே.ராஜன் – பயில்வான் ரங்கநாதன் மோதல் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த பயில்வான் ரங்கநாதன் நிருபர்களிடம் பேசுகைளில், கே.ராஜன் நான் நடிகைகளிடம் பணம் வாங்கிக்கொண்டு இருப்பதாக கூறியுள்ளார். உண்மையிலே இந்த வேலையை அவர்தான் செய்துகொண்டிருக்கிறார். இல்லை என்று அவரை சொல்ல சொல்லுங்க் பார்ப்போம். என்று கூறியுள்ளார்.
மேலும் பாக்யராஜ் சார் சொன்னதை நான் சொல்கிறேன். எனக்கு படங்களில் நஷ்டம் என்று சொல்லும் கே.ராஜன் தன்னிடம் வாங்கிய லட்ச ரூபாய் கடனை திருப்பி தரவில்லை என்று சொல்கிறார். இந்த பணம் எப்படி வந்தது. அவரை பதில் சொல்ல சொல்லுங்கள். கொடுத்த கடனை வாங்க திராணி இல்லாத நீ என்னிடம் வந்து சண்டை போடுகிறாயா என்று கேட்டுள்ள பயில்வான், என்னை பற்றி பேசினால் அவருக்கு அதிக வியூவர்ஸ் வருவதாகவும் அதனால்தான் என்னை பற்றி அதிகம் பேசுவதாகவும் கூறியுள்ளார்.
நயன்தாரா விஷயத்தில் நான் சொன்னது நடந்தது. அதேபோல் ரஜினி சார் விஷயத்தில் நான் சொன்னது நடந்து. இப்படி நான் சொல்லி நடக்கததது எதாவது இருந்தால் சொல்லுங்க பார்ப்போம் என்று கூறியுள்ள அவர் சினிமா விழாவில் சினிமாவுக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்கள் பற்றி பேசாதீங்க என்பதே எனது கோரிக்கை என்று கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/